

வேலைவாய்ப்பு, கல்வி, தொழில் வாய்ப்புகள் என பல்வேறு வசதிகள் கிராமங்களை விட நகரங்களில் அதிகம். இதனால் மக்கள் கிராமங்களிலிருந்து நகரங்களை நோக்கி நடைபோடுவது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக டெல்லி, சென்னை, மும்பை, கொல்கத்தா போன்ற பெரிய நகரங்களில் மக்கள் தொகை பிரமிக்க வைக்கும் அளவுக்கு அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. உலகில் மிகப் பெரிய நகரங்களில் உள்ள மக்கள் தொகை குறித்த ஆய்வை உலக வங்கி வெளியிட்டுள்ளது. மேலும் 2030-ம் ஆண்டு இந்த நகரங்களில் மக்கள் தொகை எவ்வளவு இருக்கும் என்றும் வெளியிட்டுள்ளது. 2014-ம் ஆண்டு உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களில் டெல்லி நகரம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ள டோக்கியோ நகரத்தின் மக்கள் தொகை தற்போது இருப்பதை விட 2030-ம் ஆண்டு குறையும் என கணித்துள்ளது.