

தகவல் தொழில்நுட்ப யுக பெண் ணொருவர் தனது வலைதளத்தில் எழுதியிருந்த வாசகம் இது. ``எனக்குத் தெரிந்த ஒரே சமையல் நூடுல்ஸ்தான். அதற்கும் தடை விதித்து எனது வயிற்றில் அடித்துவிட்டார்கள்’’. இந்த வாசகத்தைப் படித்த பல பெண்களும் தங்களது புலம்பலையும் சேர்த்து இவர் வெளிக்காட்டிவிட்டார் என்றே நினைத்தனர். அதுதான் உண்மை.
தகவல் தொழில்நுட்ப உலகின் பெரும்பாலான பெண்களுக்கு சமை யலறை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படி தெரிந்தவர்களது சமையல் 2 நிமிட உடனடி உணவான நூடுல்ஸ்தான். பெண்களுக்கு மட்டுமல்ல, அவசர நேரத்தில் ஆண்களுக்கும் கை கொடுக்கும் உணவாக இருப்பது நூடுல்ஸ் போன்ற உடனடி உணவு வகைகள்தான்.
அந்த வகையில் மாநில பேதமின்றி பெரும்பாலான சமையலறையை ஆக்ர மித்திருந்தது நூடுல்ஸ். அதில் மாகி நூடுல்ஸ்தான் ராஜாவாக கோலோச் சியது என்றால் அது மிகை அல்ல.
மோனோசோடியம் குளுட்டோமேட் (எம்எஸ்ஜி) எனப்படும் வேதிப்பொருள் மாகி நூடுல்ஸில் இருப்பதாக சோத னையில் தெரியவந்தது. இதனால் இந்தி யாவில் பெரும்பாலான மாநிலங்களில் 5 மாதங்களுக்கு முன்பு மாகி நூடுல்ஸுக்கு தடை விதிக்கப்பட்டது.
தயாரிக்கப்பட்ட அனைத்து மாகி பாக்கெட்டுகளையும் சிமென்ட் உலையில் இட்டு அழித்தது. பொருள் களை திரும்பப் பெற்றது, அதை அழித் தது உள்ளிட்டவற்றால் நெஸ்லே நிறுவ னத்துக்கு பெரும் நஷ்டம். ஆனால் அதில் மனம் தளராமல் மீண்டும் தனது தயாரிப்புகளை தீபாவளி பரிசாக சந்தை யில் அறிமுகப்படுத்தியுள்ளது நெஸ்லே.
பூக்கடைக்கு விளம்பரம் எதற்கு என்பது அந்தக் கால பழமொழி. ஆனால் நவீன உலகில் பூச்செண்டு விற்கும் கடைகளும் விளம்பரம் செய்கின்றன. பல ஆண்டுகளாக பிரபலமாக இருந்த மாகி, தனது மறு அறிமுகத்தை ஆன்லைன் விற்பனை நிறுவனமான ஸ்நாப்டீலுடன் கைகோர்த்து சந்தையில் நுழைந்தது.
குழந்தைகளை குதூகலப்படுத்தும் நோக்கில் ஸ்நாப்டீல் மாகி விற்பனையைத் தொடங்கிய 5 நிமிடத்தில் 60 ஆயிரம் பாக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டன. 2 நிமிட உடனடி உணவான மாகி 5 நிமிடத்தில் 60 ஆயிரம் விற்றுத் தீர்ந்தது உற்பத்தியாளர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது.
மளிகைப் பொருள்களை ஆன்லை னில் விற்பனை செய்யும் குரோஃபெர்ஸ் நிறுவனம் ஒரு கட்டத்தில் மாகி நூடுல்ஸ் பாக்கெட்டுகளை ஒரு ஆர்டருக்கு மூன்று பாக்கெட்டுகள்தான் அளிக்க முடியும் என கட்டுப்பாடு விதிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஒரே நாளில் 30 ஆயிரம் பாக் கெட்டுகளை இந்நிறுவனம் விநியோ கித்துள்ளது. இது தவிர மாகி நூடுல்ஸின் பிற தயாரிப்புகள் 4 ஆயிரம் வரை விற்பனையானதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
முதல் நான்கு நாளில் மொத்தம் 2.5 கோடி மாகி நூடுல்ஸ் பாக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன. பாம்பே ஸ்காட்டிஷ் பள்ளி மாணவன் நண்பர்களுக்கு மாகி நூடுல்ஸ் விருந்து அளித்து, மாகி மறு அறிமுகத்தை வரவேற்றுள்ளான். வட மாநிலங்களில் பெரிதும் கொண்டாடப்படும் பாய் தூஜ் எனப்படும் விழாவுக்கு தனது சகோதரிக்கு அன்பளிப்பாக மாகி நூடுல்ஸ் பாக்கெட்டுகளை வாங்கிச் சென்றதாக தெரிவிக்கிறார் டெல்லியைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப பொறி யாளர் கௌரவ் சேத்.
5 மாதங்களாக மாகி நூடுல்ஸ் சந்தையில் விற்பனையில் இல்லாத போது போட்டி நிறுவனத் தயாரிப்புகள் விற்பனை பல மடங்கு அதிகரித்திருக்க வேண்டும். ஆனால் அப்படி ஏதும் நிகழவில்லை. தடை நீங்கி மாகி மீண்டும் வந்தபோது அதற்குக் கிடைத்த வரவேற்பு அத் தயாரிப்பின் சுவை மக்களை கட்டிப்போட்டுள்ளது என்பதையே காட்டுகிறது.
மக்கள் சுவைக்கு அடிமை என்ப தெல்லாம் ஒருபுறம். சந்தர்ப்ப சூழ்நிலை அல்லது அறியாமல் நிகழ்ந்த தவறை சரிசெய்து பூஜ்யத்திலிருந்து தனது பயணத்தைத் தொடங்கியுள்ள மாகி-யை நிச்சயமாக ஒரு ஃபீனிக்ஸ் பறவை என்று சொல்வதும் பொருத்தமாகத்தான் இருக்கும்.