டிப்ஸ்: எரிபொருள் சிக்கனத்துக்கு...
கார் இன்ஜினை ஸ்டார்ட் செய்த பின்பு அதிக ஆக்சிலரேட் செய்யாமல் கியரை என்கேஜ் செய்து பின்பு மிதமாக ஆக்சிலரேட் கொடுத்து வாகனத்தை நகர்த்துவதன் மூலம் எரிபொருள் சேமிக்கலாம்.
இன்ஜினின் வேகத்திற்கேற்ப கியர் மாற்றுவதைக் கடைபிடிப்பதன் மூலம் கியர் ரேஷியோ சரியாக இருக்கும், இதை சரியாக பின்பற்றுவதன் மூலம் மூலம் எரிபொருள் சேமிக்கலாம்.
சிக்னலில் வாகனம் நிற்கும் போது இன்ஜினை ஆஃப் செய்து விட்டு பச்சை விளக்கு எறிய 15 நொடிகள் இருக்கும் போது இன்ஜினை ஸ்டார்ட் செய்து பின்பு வாகனத்தை இயக்குவதன் மூலம் எரிபொருள் சேமிக்கலாம்.
வாகனம் ஓட்டும் போது கிளட்ச் பெடலின் மீது கால் வைத்து ஓட்டுவதைத் தவிர்த்து வந்தால் இன்ஜினின் சக்தி வீணாவதைத் தவிர்க்க முடியும் அதோடு கிளட்சின் தேய்மானமும் குறையும், இதன் மூலமும் எரிபொருள் சேமிக்கலாம்.
டயரின் காற்றழுத்தம் முறையாக பராமரிப்பதன் மூலம் இன்ஜினின் சக்தி விரயமாவதைத் தவிர்க்க முடியும் இதன் மூலமும் எரிபொருளை சேமிக்கலாம், அதோடு டயரின் ஆயுள் காலத்தையும் அதிகரிக்கலாம்.
குறிப்பிட்ட கால இடைவெளியில் தவறாமல் இன்ஜின் ஆயில் மாற்றுவதையும் பியூயல் சிஸ்டத்தை சுத்தம் செய்வது மற்றும் மாற்றுவதையும் தவறாமல் கடைப்பிடித்து வந்தால் எரிபொருள் வீணாவதை தவிர்க்க முடியும், இன்ஜினின் சப்தமும் அதிகமாகாமல் இருக்கும்.
வெகு நாட்கள் இயக்காமல் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களில் எரிபொருளின் தரமும், அதோடு அதன் எரியும் திறனும் குறைந்து விடும், மீண்டும் இயக்கும் பட்சத்தில் பழைய எரிபொருளை எடுத்து விட்டு புதிய எரிபொருளை நிரப்பி பின்பு இயக்குவதன் மூலம் பியூயல் சிஸ்டம் நன்றாக இருக்கும், மைலேஜும் நன்றாக கிடைக்கும்.
தேவையான போது மட்டும் குளிர் சாதனத்தை (ஏசி) உபயோகித்து மற்ற நேரங்களிள் தவிர்த்து வந்தோமானால் எரிபொருள் சேமிப்பாகும். மைலேஜும் கிடைக்கும்.
பிரேக் சிஸ்டத்தை முறையாகப் பராமரிப்பதன் மூலம் `வீல் ஜாம்’ ஆகும் சூழ்நிலையைத் தவிர்க்கலாம், இதனால் இன்ஜினின் சக்தி விரயமாவதைத்தவிர்க்கலாம். மேலும் எரிபொருள் வீணாவதையும் தவிர்க்க முடியும்.
வாகனத்தில் பயணம் செய்யும் போது இருக்கைக்கு ஏற்றவாறு ஆட்கள் பயணம் செய்ய வேண்டும், அதிகபடியான ஆட்கள் பயணம் செய்யும் போது இன்ஜின் அதிக பாரம் இழுப்பதால், எரிபொருள் அதிகம் செலவாகும்.
தகவல் உதவி
கே.ஸ்ரீனிவாசன், உதவி துணைத் தலைவர், டிவிஎஸ் ஆட்டோமொபைல் சொல்யூஷன்ஸ்.
