

1947ஆம் ஆண்டு பிறந்த ஜான் சி மேக்ஸ்வெல் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர், பேச்சாளர் மற்றும் போதகர். செயல்திறன் குறித்த இவரது கோட்பாடுகள் பெரும் புகழ்பெற்றவை. செயல்திறன் சார்ந்த இவரது பயிற்சியின் மூலம் பல ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர். தலைமைப்பண்பு குறித்த பல புகழ்பெற்ற புத்தகங்களை எழுதியுள்ளார்.
உலகளவில் இவரது புத்தகங்கள் பல லட்சக்கணக்கான பிரதிகள் விற்று சாதனை படைத்துள்ளன. பெரும் நிறுவனங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளிடையே ஆண்டுதோறும் உரையாற்றுகிறார். உலகின் தலைசிறந்த தலைமைப்பண்பு மற்றும் மேலாண்மை நிபுணராக கருதப்படுகிறார்.
தோல்வியை அறிதலும் அதற்கான பதிலுமே சராசரி மனிதர்களுக்கும் சாதனை மனிதர்களுக்கும் இடையேயான வித்தியாசம்.
வழியை அறிந்தவராகவும், அந்த வழியில் செல்பவராகவும் மற்றும் வழி காட்டுபவராகவும் இருப்பவரே தலைவர்.
தோல்வியை நோக்கிய உங்களின் அணுகுமுறை, தோல்விக்கு பிந்தைய உங்களின் அந்தஸ்தை தீர்மானிக்கின்றது.
குடும்பம் மற்றும் நட்பு ஆகியவையே மகிழ்ச்சியின் மிகச்சிறந்த இரண்டு அனுசரணையாளர்கள்.
பணத்தை விட நேரம் அதிக மதிப்புடையது ஏனென்றால் நேரம் ஈடு செய்யமுடியாதது.
உங்கள் வெற்றியின் ரகசியம், உங்களுடைய தினசரி செயல்பாட்டின் மூலமே நிர்ணயம் செய்யப்படுகின்றது.
நல்லவற்றிற்கு மறுப்பு சொல்ல கற்றுக்கொள்ளுங்கள், அதனால் சிறந்தவற்றிற்கு உங்களால் ஒப்புதல் தெரிவிக்க முடியும்.
தோல்வியடைந்த திட்டங்களைக் கண்டிப்பாக தோல்வியடைந்த கண்ணோட்டமாகக் கருதக்கூடாது.
கற்றுக்கொள்வதற்காக வாழுங்கள், உண்மையில் நீங்கள் வாழ்வதற்கு கற்றுக்கொள்வீர்கள்.
நமது அணுகுமுறைகளுக்கான பொறுப்புகளை நாம் எப்பொழுது மொத்தமாக ஏற்றுக்கொள்கிறோமோ, அந்த நாளே வாழ்வின் மிகச்சிறந்த நாள்.
வலி அல்லது தோல்வியின் அனுபவமே வலிமை வாய்ந்த ஊக்க சக்தியாக இருக்கமுடியும்.
ஒரு மணி நேர பேச்சை விட ஒரு நிமிட சிந்தனை மேலானது.