வெற்றி மொழி: ஈசாப்

வெற்றி மொழி: ஈசாப்
Updated on
1 min read

கிரேக்க நாட்டைச் சேர்ந்தவர் ஈசாப். இவர் கி. மு. 600 ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் வாழ்ந்தவர். குழந்தைகளுக்கான சிறந்த நீதிகளை எளிய கதைகள் மூலம் சொல்வதில் மிகவும் தேர்ந்தவர்.

இவர் கூறிய நீதிக்கதைகள் ஈசாப்பின் நீதிக்கதைகள் என அழைக்கப்பட்டு பெரும் புகழ்பெற்றவை. விலங்குகளின் வாயிலாக உணர்த்தப்படும் இந்த நீதி, மானிட சமுதாயத்திற்கும் ஏற்புடையதாக இருப்பதே இதன் சிறப்பம்சம். காலம் கடந்து நிற்கும் இந்த நீதிக்கதைகள் பெரும்பாலான உலக மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு பின்பற்றப்பட்டு வருகின்றன.

தீயவற்றின் விதையை அழித்துவிடுங்கள் இல்லையென்றால் அது உங்களின் அழிவு வரை வளர்ந்துவிடும்.

பொய்யனை ஒருபோதும் யாரும் நம்பப்போவதில்லை, அவன் உண்மையே பேசினாலும் கூட.

மனிதர்களின் தோற்றங்கள் பொதுவாக ஏமாற்று வேலையையே அடிக்கடி செய்கின்றன.

விவகாரங்கள் என்பவை வெளியேறுவதை விட நுழைவதற்கு எளிதானவை.

காயங்கள் மன்னிக்கப்பட்டு விடலாம் ஆனால் மறக்கப்படுவதில்லை.

துன்பத்தில் இருப்பவனின் அறிவுரையை ஒருபோதும் நம்ப வேண்டாம்.

உறுதியான எதிரியை விட ஒரு நிச்சயமில்லாத நண்பன் மோசமானவன்.

ஒன்றுபட்டோம் எழுந்து நின்றோம்; பிளவுபட்டோம் வீழ்ந்துவிட்டோம்.

மெதுவான ஆனால் உறுதியான நிலைப்பாடே போட்டியில் வெற்றி பெறுகின்றது.

பாதுகாப்பான தூரத்தில் தைரியமாக இருப்பது என்பது எளிதானது.

நன்றியே உன்னதமான ஆத்மாக்களின் அடையாளம்.

ஒவ்வொரு உண்மையும் இரண்டு பக்கங்களைக் கொண்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in