வெற்றி மொழி: வில்லியம் ஜேம்ஸ்

வெற்றி மொழி: வில்லியம் ஜேம்ஸ்
Updated on
1 min read

1842-ஆம் ஆண்டு ஒரு பணக்கார குடும்பத்தில் பிறந்த வில்லியம் ஜேம்ஸ், அமெரிக்க நாட்டைச் சேர்ந்த தத்துவவாதி மற்றும் உளவியலாளர். மேலும் மருத்துவராகவும் பயிற்சி பெற்றுள்ளார். அமெரிக்க உளவியல் துறையின் முன்னோடி கல்வியாளராக விளங்கினார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் மிக முக்கிய சிந்தனையாளர்களில் ஒருவராக வில்லியம் ஜேம்ஸ் கருதப்படுகிறார்.

இவர் சாஸ்திரம், கல்வி, சமயம், உளவியல் மற்றும் உள்ளுணர்வு போன்ற பல்வேறு தலைப்புகளில் தனது படைப்புகளைக் கொடுத்துள்ளார். அமெரிக்காவின் அதிக செல்வாக்கு பெற்ற தத்துவவாதிகளில் ஒருவராக போற்றப்படுகிறார். மேலும், அமெரிக்க உளவியலின் தந்தை என்றும் அழைக்கப்படுகிறார்.

எப்பொழுதெல்லாம் மற்றவருடன் உங்களுக்கு முரண்பாடு ஏற்படுகிறதோ, அப்பொழுது உறவு சிதைவதற்கும் மற்றும் ஆழமாவதற்கும் இடையேயான வித்தியாசத்தை ஏற்படுத்துவது உங்கள் அணுகுமுறையே.

நமது தலைமுறையின் மிகப்பெரிய கண்டுபிடிப்பானது, ஒரு மனிதன் தன் அணுகுமுறைகளை மாற்றுவதன் மூலம் தனது வாழ்க்கையை மாற்ற முடியும் என்பதே.

நடந்தவற்றை ஏற்றுக்கொள்வதே துரதிருஷ்டத்தின் விளைவுகளை எதிர்கொள்வதற்கான முதல் படி.

அவநம்பிக்கை பலவீனத்திற்கு வழிவகுக்கிறது; நம்பிக்கை ஆற்றலுக்கு வழிவகுக்கிறது.

பிறகு எப்படி இருக்கப்போகிறீர்களோ, அதுபோல இருப்பதற்கு இப்பொழுதே தொடங்கி விடுங்கள்.

வாழ்க்கையானது வாழ்வதற்கு மதிப்பானது என்பதை உறுதியாக நம்புங்கள், உங்கள் நம்பிக்கை அதை உண்மையாக்க உதவும்.

மற்றொரு சிந்தனையை தேர்வு செய்துகொள்வதற்கான நமது திறனே, மன அழுத்தத்திற்கு எதிரான மிகப்பெரிய ஆயுதம்.

உங்களுக்கு ஒரு தகுதி வேண்டும் என்றால், ஏற்கெனவே அதனைப் பெற்றுவிட்டதைப் போல செயலாற்றுங்கள்.

செயல்பாடு மகிழ்ச்சியைக் கொண்டுவராமல் போகலாம், ஆனால் செயல்பாடு இல்லாமல் எந்தவித மகிழ்ச்சியுமில்லை.

வாழ்க்கையானது வாழ்வதற்கான மதிப்புடையதா? அது வாழ்பவரைப் பொறுத்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in