

புதிய தொழில்முனைவோர்களுக்கான ஊக்குவிப்பு நடவடிக்கைகள் கடந்த காலங்களைவிட தற்போது மிக அதிகமாகவும் வேகமாகவும் கிடைத்து வருகிறது. புதிய ஐடியாக்களுக்கான வென்ச்சர் முதலீடுகள் அதிகரித்துள்ளன. பெரிய நிறுவனங்கள் வென்ச்சர் முதலீடுகளை ஒரு பக்கம் மேற்கொள்கிறது என்றால், ஏஞ்செல் முதலீடுகளை தொழிலதிபர்கள் தனியாக தங்களது விருப்பத்துக்கு ஏற்ப புதிய ஐடியாக்களுடன் வரும் தொழில் முனைவோர்களுக்கு பக்க பலமாக இருந்து வருகின்றனர்.
இதற்கேற்ப பல தொழிலதிபர்கள் தங்களுடைய முதலீடுகளில் ஒரு பகுதியை ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்கின்றனர். இந்திய அளவில் ஏஞ்செல் முதலீடுகளில் முன்னணி இடத்தில் இருக்கும் சில தொழிலதிபர்கள்...
மோகன்தாஸ் பாய்
பட்டய கணக்காளர், வழக்கறிஞர், மணிபால் குளோபல் எஜூகேஷன் நிறுவனத்தின் தலைவர் என பல முகங்களைக் கொண்டவர். இன்போசிஸ் லீடர்ஷிப் இன்ஸ்ட்டியூடின் நிர்வாக தலைவர். இன்போசிஸ் நிறுவனத்தில் தலைமை நிதி அதிகாரியாக பணியாற்றியுள்ளார். அந்த நிறுவனத்தை நாஸ்டாக் பங்குச் சந்தையில் பட்டியலிட வைத்ததில் முக்கிய பங்கு வகித்தவர். சிறந்த பேச்சாளர்.
முதலீடு செய்துள்ள நிறுவனங்கள்
lசிம்ப்ளி பைவ் lஹோம்லேன்
lக்ளோன்க்ட் சொல்யூஷன்ஸ் lடாக்ஸூட்ரா
lதிபெட்டர் இண்டியா lயுவர் ஸ்டோரி
lஆன்லைன் தையாரி lரெஸி lஸிம்பெர்
ரத்தன் டாடா
இந்தியாவின் முன்னணி தொழிலதிபர். டாடா குழும பொறுப்பிலிருந்து விலகிய பிறகு புதிய தொழில் முனைவோர்களை ஊக்குவித்து வருகிறார்.
முதலீடு செய்துள்ள நிறுவனங்கள்
lகார்டெக்கோ lகார்யா
lஹோலாசெஃப் lயுவர்
ஸ்டோரி lஏம்பர் lலைபரேட்
lஓலா lஇன்பினைட் அனலட்டிக்ஸ்
குணால் பாஹ்ல்
ஸ்நாப்டீல் நிறுவனத்தின் இணை நிறுவனர். டெல்லி பப்ளிக் பள்ளி மற்றும் கெல்லாக் பிசினஸ் பள்ளியில் படித்தவர். டிடர்ஜெண்ட் சோப் விற்பனைக்காக வால்மார்ட் நிறுவனத்தில் வேலைபார்த்தவர். மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் சில காலம் பணியாற்றியுள்ளார்.
ரோஹித் பன்சால்
ஸ்நாப்டீல் நிறுவனத்தின் இணை நிறுவனர். டெல்லி ஐஐடியில் படித்தவர். குணால் பாஹ்ல் பள்ளி நண்பர்.
முதலீடு செய்துள்ள நிறுவனங்கள்
lபிவகூஃப் lரொவ்டோபை
lஅர்பன்கிளாப் lபிளாங்
lஷாடோவ்பாக்ஸ் lஸினடிக்ஸ்
lமேட்ரேட் கேம்ஸ்
lபிடாஅவுட்
சச்சின் பன்சால்
சாப்ட்வேர் இன்ஜினீயர், இணையதள தொழில் முனைவர். முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட்டின் இணை நிறுவனர். டெல்லி ஐஐடியில் படித்தவர். வயது 34
பின்னி பன்சால்
ப்ளிப்கார்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர். அமேசான் நிறுவனத்தின் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். டெல்லி ஐஐடியில் படித்தவர்.
முதலீடு செய்துள்ள நிறுவனங்கள்
lநியூஸ் இன் ஷார்ட்ஸ் lட்ராக்ஸ்ன்
lரோபோசோ lபிளாப்ரோ lட்ரூஹெச்பி
அனுபம் மிட்டல்
பீப்பிள் குழும நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி. மேட்ரிமோனி இணையதளமான சாதி டாட் காம் நிறுவனர். இவரது குழும இணையதளங்களை மாதத்துக்கு 4 கோடி வாடிக்கையாளர்கள் பார்வையிடுகின்றனர். இரண்டு திரைப்படங்களில் நடிக்கவும் செய்துள்ளார்.
முதலீடு செய்துள்ள நிறுவனங்கள்
lநியர்.இன் lட்ரூபில்,
lதி போர்ட்டர்
lஆர்பஸ் lஇன்ஸ்டவெலி
ஸிஹான் ஹயாத்
மும்பை ஐஐடி-யில் படித்தவர். ஐடிசி, ஓபேரா சொல்யூஷன்ஸ், பியூச்சர் பஸார் டாட் காம் உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றியவர். டாப்பர் ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் இணை நிறுவனர். வயது 33
முதலீடு செய்துள்ள நிறுவனங்கள்
lஸ்கொயட்ரன் lகியூவொய்கே
lஅரபிந்த் பிக்கிங்கோ
lசடோபாக்ஸ்