

பங்குச் சந்தை ஒரு சூதாட்டம் என அதைப் பற்றி முழுவதும் தெரியாதவர்கள் கூறுகின்றனர். ஆனால் இதில் காணப்படும் சீரற்ற தன்மை, உள்நாட்டு பொருளாதார சூழல் மட்டுமின்றி, பிற நாடுகளில் ஏற்படும் பொருளாதார ஏற்றத்தாழ்வு காரணமாகவும் பெரும் சரிவை ஏற்படுத்தி உலகளவில் பெரும் பொருளாதார பாதிப்பை ஏற்படுத்துகிறது.
கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி இந்திய பங்குச் சந்தை மட்டுமின்றி சர்வதேச பங்குச் சந்தைகளிலும் கடும் சரிவு ஏற்பட்டது. சிறு முதலீட்டாளர்கள் மட்டுமின்றி பெரும் கோடீஸ்வரர்களும் நஷ்டத்தைச் சந்தித்தனர்.
$ இந்திய பங்குச் சந்தையில் அன்றைய ஒரு நாள் நஷ்டம் ரூ.7 லட்சம் கோடி.
$ பங்குச் சந்தை மொத்த மதிப்பு ரூ.100 லட்சம் கோடிக்கும் கீழாக சரிந்ததும் அன்றுதான்.
$ நிறுவனர்கள் வசமிருந்த பங்குகளின் மதிப்பு ரூ.4 லட்சம் கோடி சரிந்தது.
$ அந்நிய முதலீட்டு நிறுவனங்களுக்கு ஏற்பட்ட நஷ்டம் 1.5 லட்சம் கோடியாகும்.
$ சில்லரை முதலீட்டாளர்களுக்கு ஏற்பட்ட நஷ்டம் ரூ.75 ஆயிரம் லட்சம்.
$ நிறுவன முதலீட்டு நிறுவனங்களுக்கு ஏற்பட்ட நஷ்டம் ரூ.1 லட்சம் கோடியாகும்.
$ அதே நாளில் டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு 78 காசுகள் வரை சரிந்தது. இதனால் ஒரு டாலருக்கு ரூ.66.80 தர வேண்டிய சூழல் உருவானது.