Published : 03 Aug 2015 01:13 PM
Last Updated : 03 Aug 2015 01:13 PM

அடுக்குமாடி வீ(கா)டு

இத்தாலியைச் சேர்ந்த ஸ்டெபனோ பியோரி என்கிற கட்டுமான நிறுவனம் மிலன் நகரத்தில் 76 அடி உயரத்துக்கு இரண்டு அடுக்குமாடி குடியிருப்பை கட்டியுள்ளது. இந்த கட்டிடத்தின் ஒவ்வொரு தளத்திலும் மரங்களை வளர்ப்பது போல வடிவமைத்துள்ளனர். இரண்டு கட்டிடங்களிலும் சேர்த்து 900 மரங்களை வளர்க்க இடம் ஒதுக்கியுள்ளனர்.

கட்டிடத்தின் மேல் தளத்தில் இருப்பவர்களும் தனி வீட்டில் மரங்கள் சூழ இருப்பதுபோல உணர வேண்டும் என்பதற்காகவும், சுற்றுச்சூழலை மேம்படுத்த எங்களது பங்களிப்பு என்றும் கூறியுள்ளது அந்த நிறுவனம். தொலைவிலிருந்து பார்த்தால் ஒரு அடுக்குமாடி காடுதான் கண்ணுக்குத் தெரியும்.

எழுத்துக்களில் அலுவலகம்

அடோப் குழுமத்தைச் சேர்ந்த பினோயிட் சாலந்த் என்கிற நிறுவனம் வித்தியாசமான வடிவமைப்புகளுக்குப் பெயர் பெற்றது. அந்த நிறுவனம் வெளியிட்ட அலுவலக வடிவமைப்பு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. பல்வேறு பயன்பாடுகளைக் கொண்ட அலுவலக அமைப்பை அப்படியே ஆங்கில எழுத்து வடிவங்களுக்கு மாற்றியுள்ளனர். இதனால் பணியாளர்களுக்கு உற்சாகம் கிடைக்கும் என்று கூறியுள்ளது.

மேலும் தனித் தனி எழுத்துக்கு ஏற்ப அவர்களிடம் உள்ள தனித்தன்மையும் வெளிப்படும் என்றும் கூறியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x