Published : 17 Aug 2015 11:10 AM
Last Updated : 17 Aug 2015 11:10 AM

நுகர்வு அனுபவத்தை பறிக்கின்றனவா இ-காமர்ஸ் விற்பனைகள்?

குறைந்த விலையில் கிடைக்கிறது என்றால் நமது மக்களுக்கு சொல்லவே வேண்டாம். மூட்டை பூச்சி இயந்திரம் என்று கருங்கல்லை பார்சல் செய்து கொடுத்தாலும் வாங்கிவிடுவார்கள் என்பதை நகைச்சுவையாக ஒரு திரைப்படத்தில் காட்டியிருப்பார்கள். அது சிரிப்பதற்காக எடுக்கப்பட்ட காட்சி என்று மட்டும் சொல்லிவிட முடியாது. நமது ஊரில் அன்றாடம் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

ஒரு பொருள் ஒரு கடையை விட அடுத்த கடையில் பத்து ரூபாய் குறைவாக கிடைக்கிறது என்றால் கூட்டமாகக் கூடி விடுகிறோம். உண்மையில் நாம் கொடுக்கும் விலை அந்த பொருளுக்கு பொருத்தமானதுதானா என்று யோசிப்பதில்லை. நவீன கால நுகர்வோர்களான ஆன்லைன் பர்ச்சேஸ் விரும்பிகள், எதிலும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா என்பது போல இந்த விஷயத்திலும் தாராளமாகவே இருக்கின்றனர்.

உட்கார்ந்த இடத்திலிருந்தே அனைத்து தேவைகளும் பூர்த்தியாகிவிட வேண்டும். வீட்டில் ஹாயாக இருக்கும் நேரமோ அல்லது அலுவலகத்தில் பிசியாக இருக்கும் நேரமோ எந்த நேரத்திலும், நேரத்தை வீணடிக்காமல் தேவையை நிறைவேற்றிக்கொள்ள முடியுமா என எதிர்பார்க்கிறது இந்த தலைமுறை. அதற்கு ஏற்ப ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு சேவைகளை வழங்கி வருகின்றன. இந்த ஆண்டில் கடந்த எட்டு மாதங்களில் பிளிப்கார்ட் நிறுவனம் மட்டும் 15 கோடி பொருட் களை இணையதளம் மூலம் விற்பனை செய்துள்ளது. இதற்கு ஏற்ப பல ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் புதிது புதிதாக உருவாகி வெற்றிபெற்று வருகின்றன.

இந்த இணைய மோகத்தில் எதை எதை வாங்கிக்குவிப்பது என்பதற்கு எந்த விதிவிலக்கும் கிடையாது. புத்தகங்கள் வாங்குவதற்கு என்று தொடங்கிய ஆன்லைன் வர்த்தகத்தில் இன்று ஆடைகள், காலணிகள், அலங்காரப் பொருட்கள், செல்போன், லேப்டாப் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் என நீண்டு கொண்டே இருக்கிறது. இவற்றை நேரில் சென்று வாங்குவதற்கு நேரம் செலவிடுவதைவிட ஆன்லைனில் வாங்குவது பரவாயில்லை என்று சமாதானம் ஆகலாம். ஆனால் இப்போது வீட்டு உபயோகப்பொருட்கள் மட்டுமல்ல, வீட்டையே ஆன்லைனில் புக்கிங் செய்யலாம் என்கின்றன இணையதளங்கள்.

வீட்டைக் கட்டிப்பார்

ஆன்லைன் மூலமாக வாடகைக்கு வீடு தேடலாம். ஆனால் சொந்த வீடு வாங்கச் சொல்கிறது இ-காமர்ஸ் நிறுவனங்கள். அதாவது வீட்டை கண்ணில் காட்டாமலேயே முன் பணத்தைக் கட்டச் சொல்கிறது. கட்டிய வீட்டை வாங்கினால்கூட கவனித்து வாங்க பல விஷயங்கள் இருக்கும்போது, கட்டப்போகிற அடுக்குமாடி திட்டங்களுக்கும் ஆன்லைனில் முன்பதிவு நடக்கிறது.

கட்டிட பிளான், கட்டுமான விவரம், கட்டுமான தரம் என எதுவுமே தெரிந்து கொள்ளாமல் ஒரு வீட்டை வாங்க முற்படுவது எந்த அளவுக்கு சரியானது என்பதை நாமும் யோசிப்பதில்லை.

நமக்கு பொருத்தமான பகுதி, வீடு, பட்ஜெட் என எல்லாம் சரியாகவே அமைந்தாலும் வீட்டை தேர்ந்தெடுக்கும்போது நேரில் பார்த்த பிறகே முடிவெடுக்க வேண்டும் என்கிறனர் அனுபவசாலிகள்.

பள பள பர்னிச்சர்

ஸ்டார்ட்அப் நிறுவனமாக ஆரம்பித்து வெற்றிபெற்றுள்ளது இணையதளம் மூலமாக பர்னிச்சர்களை விற்கும் இ-காமர்ஸ் நிறுவனம் ஒன்று. விற்பனை மையம் இல்லாமலேயே பர்னிச்சர்களை விற்பதில் முன்னணி நிறுவனமாகவும் உள்ளது.

வீட்டுக்கு பொருத்தமான பர்னிச் சர்களை உயர்தரமாக வாங்க உள்ளூரி லேயே பல விற்பனையாளர்கள் இருக் கிறார்கள். ஆனால் ஆன்லைனில் வாங்குவது கவுரவமாக நினைக்கிறது நவீன நுகர்வு. பொருத்தமான விலையா, அல்லது தரமானதுதானா என்பதை எப்படி முடிவு செய்வது? மொத்தமாக பெரு நிறுவனங்கள் கொள்முதல் செய்வதால் இதுபோன்ற நிறுவனங்கள் வளர்கின்றன என்று சொல்ல முடியாது. தனி நுகர்வோர்களும்தான் இந்த இணையதளத்துக்கு படையெடுக் கிறார்கள்.

பார்சலில் எல்இடி

வீட்டு உபயோகப் பொருட்களையும் உட்கார்ந்த இடத்திலிருந்தே வாங்கு கிறார்கள். இந்த வகையில் ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், எல்இடி டிவி, மைக்ரோவேவ் ஓவன் போன்ற வற்றைக்கூட இகாமர்ஸ் நிறுவனங்கள் விற்பனை செய்கின்றன.

இந்த சாதனங்கள் அருகிலுள்ள விற்பனை மையங்களில் கிடைக்கா தவையா என்ன? இது போன்றவற்றை சோதித்து வாங்கினாலே நம்மவர்களுக்கு முழு திருப்தி கிடைக்காது. ஆனால் இணையத்தில் பார்ப்பதன் மூலம் மட்டுமே நம்பி வாங்குகிறோம்.

பாதுகாப்பாகத்தான் அனுப்பு கிறார்கள், பொருளில் பிரச்சினை என்றால் திருப்பி அனுப்பும் வசதி உள்ளது என கேட்பவர்களுக்கு பதில் சொல்லலாம்.

ஆனால் இந்த வகை சாதனங் களுக்கான விற்பனைக்கு பிறகான சேவை, வாரண்டி, கியாரண்டி போன்ற விஷயங்களுக்கு விற்பனை மையங்களில் வழிகாட்டுதல் கிடைக்கும்.

ஆபரணம்

தங்க, வைர நகை விற்பனையும் இப்போது ஆன்லைனில் பிரபலமாகி வருகிறது. கடைகளுக்கு நிகரான டிசைன்கள் ஆன்லைன் ஸ்டோர்களிலும் கிடைக்கிறது.

ஆனால் இவற்றின் தரம் குறித்த நம்பிக்கைகளை நகை விற்பனை மையங்களில் கிடைப்பது போல முழு திருப்திகரமாக இல்லை என்கின்றனர் வாங்கியவர்கள். வைர நகைகளை பொறுத்தவரை நபர்களுக்கு ஏற்ப சில நம்பிக்கைகள் உள்ளன. அந்த அனுபவம் கிடைக்காது.

தவிர ஆன்லைனில் வாங்குவதற்கும் நேரடியாக கடைகளில் வாங்குவதற்கும் விலை வித்தியாசம் கிடையாது என்கின் றனர்.

பொதுவாகவே எல்லா துறைகளிலும் இகாமர்ஸ் நிறுவனங்கள் வளர்ந்து வருகிறதுதான். எதிர்கால இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்கு தவிர்க்க முடியாததுதான். ஆனால் தற்போதைய நிலைமையில் ஆன்லைன் மூலமாகவே எல்லாவற்றையும் வாங்க வேண்டிய எந்த நிர்பந்தமும் இந்திய சமூகத்துக்கு உருவாகவில்லையே...

அதுபோல இகாமர்ஸ் நிறுவன விலைகளுக்கும், விற்பனை மையங் களின் விலைக்கும் பெரிய வித்தியா சங்கள் கிடையாது. சில நூறு அல்லது ஆயிரங்களில் அப்படி சேமிக்கிறபோது நுகர்வோராக நாம் அனுபவிக்க வேண்டிய திருப்தி, பணத்துக்குரிய தரம் போன்றவற்றை இழக்கிறோம் என்கிறது ஆய்வுகள்.

நமது நேரத்தை மிச்சப்படுத்துகிறது என்று, எல்லா நேரத்திலும் இ-காமர்ஸ் மோகத்தில் திளைப்பது சரியா? இந்த கேள்விக்கான பதிலை புறக் கணிப்பவர்கள் மெல்ல மெல்ல தங்களது நுகர்வு அனுபவத்தை இழந்து கொண்டிருக்கிறார்கள் என்றே புரிந்து கொள்ள வேண்டியிருக்கும். இந்த விஷயத்தில் நீங்கள் எப்படி?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x