

1893-ம் ஆண்டு பிறந்த பரமஹம்ச யோகானந்தர் இந்தியாவைச் சேர்ந்த யோகி, துறவி மற்றும் குரு ஆவார். பல்வேறு விரிவுரைகள் மற்றும் கற்பித்தலின் மூலமாக இந்தியாவின் தொன்மையான பழக்கவழக்கங்களையும், தியானத்தின் பாரம்பரியத்தையும் உலகெங்கும் பரப்பினார். இவரது யோகியின் சுயசரிதை என்னும் நூல் சிறந்த ஆன்மீக வழிகாட்டுதல் நூலாகக் கருதப்படுகிறது.
நான்கு மில்லியன்களுக்கும் அதிகமான பிரதிகள் விற்பனையான இந்நூல், 21-ம் நூற்றாண்டின் நூறு மிகச்சிறந்த ஆன்மிக நூல்களில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது. அமெரிக்காவில் யோகா ஆசிரியராக தனது வாழ்நாளின் பெரும்பகுதியை கழித்த முதல் இந்தியர் இவரே. தன் மரணத்துக்கு முன்னரே அதுபற்றி சில நாட்களாகவே குறிப்பிட்டு வந்த யோகானந்தர் 1952-ம் ஆண்டு மறைந்தார்.
# தோல்வியின் பருவமே வெற்றியின் விதைகளை விதைப்பதற்கான சிறந்த காலமாகும்.
# நமக்குள் எப்போதும் இரண்டு சக்திகள் ஒன்றுக்கொன்று எதிராக போரிட்டுக்கொள்கின்றன.
# உண்மையான நண்பர்களை ஈர்க்கும் ஒரு காந்தம் உங்கள் இதயத்தில் உள்ளது.
# நடுநிலை தன்மையுடன் இருப்பது என்பது புத்திசாலித்தனமான ஒன்று.
# அனைத்து நேர்மையான பணிகளும் சிறந்த பணியே; இது சுய மேம்பாட்டுக்கு வழிவகுக்கும் திறன் கொண்டது.
# நீங்கள் தோல்வியடையும் போதெல்லாம், எழுந்து மீண்டும் முயற்சிக்கவும்.
# உங்கள் வாழ்க்கையை நீங்கள் சாதாரண வழியில் இயங்கவிடக் கூடாது.
# கிண்டலான வார்த்தைகள், பார்வைகள் அல்லது பரிந்துரைகளால் மற்றொரு ஆத்மாவை காயப்படுத்துவது வெறுக்கத்தக்கது.
# ஒவ்வொரு கணத்தின் அதிசயத்தையும் அழகையும் முழுமையாக அனுபவியுங்கள்.
# நீங்கள் மகிழ்வதற்கும் மகிழ்விப்பதற்குமே பூமிக்கு வந்திருக்கிறீர்கள்.
# நிறைவேறாத ஆசைகளின் சக்தியே அனைத்து மனிதர்களின் அடிமைத்தனத்திற்கான வேர்.
# முடிவுகள் தவிர்க்கமுடியாதவை என்று விடாமுயற்சி உத்தரவாதம் அளிக்கிறது.
# தற்போதைய தருணத்தில் புத்திசாலித்தனமாகவும் ஆர்வத்துடனும் வாழ்வதே மனம் மற்றும் உடல் ஆகியவற்றின் ஆரோக்கியத்தின் ரகசியம்.
# ஒவ்வொரு நாளைய தருணமும் ஒவ்வொரு இன்றைய தருணத்தால் தீர்மானிக்கப்படுகிறது