

1893-ம் ஆண்டு பிறந்த மா(வோ) சேதுங் சீன கம்யூனிஸ்ட் தலைவர், புரட்சியாளர், கோட்பாட்டாளர், போர் வீரர், ராஜதந்திரி, கவிஞர் மற்றும் தொலைநோக்கு சிந்தனையாளர் ஆவார். சீனாவை உலக சக்தியாக உருவாக்குதல், நவீனமயமாக்கல், பெண்களின் நிலையை மேம்படுத்துதல், கல்வி மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு ஆகியவற்றை மேம்படுத்துதல் போன்றவற்றில் பெரும் பங்காற்றியவர்.
சீனாவின் ஆற்றல் மிக்க தலைவரான மாவோ, நீண்டகால உடல்நலக்குறைவின் காரணமாக 1976-ம் ஆண்டு மறைந்தார். நவீன உலக வரலாற்றில் மிக முக்கியமான மற்றும் செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவராகவும், உலகின் தலைசிறந்த அரசியல் மேதையாகவும் கருதப்படுகிறார்.
# சிரமமான தருணங்களின் போது, நம் சாதனைகளைப் பற்றிய பார்வையை நாம் இழக்கக் கூடாது.
# செயலற்ற தன்மை நமக்கு ஆபத்தானது. எதிரிகளைச் செயலற்றவர்களாக ஆக்குவதே நமது குறிக்கோள்.
# அனைத்து பிற்போக்குவாதிகளும் காகிதப் புலிகள் போன்றவர்கள்.
# எல்லா போராட்டங்களும் புரிந்துகொள்ளப்பட்டவுடன், அற்புதங்கள் சாத்தியமாகும்.
# கிணற்றின் அடிப்பகுதியில் உள்ள தவளைபோல, நாம் மிகவும் சிறிய அளவே சிந்திக்கிறோம்.
# மந்த புத்தியுள்ள ராணுவத்தால் எதிரிகளைத் தோற்கடிக்க முடியாது.
# வெகுஜனங்களின் மிகப்பெரிய ஆற்றலை நான் கண்டிருக்கிறேன். இந்த அஸ்திவாரத்தில் எந்தவொரு பணியையும் நிறைவேற்ற முடியும்.
# அனைத்து உண்மையான அறிவும், நேரடி அனுபவத்திலேயே உருவாகிறது.
# அரசியல் என்பது ரத்தமில்லாத போர். அதேசமயம் போர் என்பது ரத்தத்துடன் கூடிய அரசியல்.
# மக்களிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள், பின்னர் அவர்களுக்கு கற்பியுங்கள்.
# நண்பர்களுக்கு இடையிலான வேறுபாடுகள், அவர்களின் நட்பை வலுப்படுத்த முடியாது.
# ஒரு பிரச்சினையை விசாரிப்பது என்பது, உண்மையில் அந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதாகும்.
# மக்களின் இராணுவம் வெல்ல முடியாதது.
# முதல் விஷயம், துன்பங்களுக்கு அஞ்சாதீர்கள். இரண்டாவது, மரணத்துக்கு அஞ்சாதீர்கள்.