ஹாரியரின் புதிய அவதாரம்

ஹாரியரின் புதிய அவதாரம்
Updated on
1 min read

ஹாரியர் எஸ்யுவியை டாடா நிறுவனம் பெரிய எதிர்பார்ப்போடு கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. இதன் கட்டமைப்பும் டிசைனும் மற்ற டாடா மாடல்களிலிருந்து முற்றிலும் தனித்து இருந்ததே இதற்கு காரணம்.

ஆனால், கியா, எம்ஜி, ஹுண்டாய் என வரிசையாக பல நிறுவனங்கள் தங்களது எஸ்யுவிகளைக் களம் இறக்கியதில் ஹாரியர் பெரிய அளவில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இதற்கு ஆட்டோமெடிக் ஆப்ஷன் இல்லாததும் ஒரு காரணமாக இருக்கலாம். எனவே, தற்போது ஹாரியரை மேலும் மேம்படுத்தி புதிய மாடலாக அறிமுகம் செய்துள்ளது.

தற்போது அறிமுகம் செய்யப் பட்டுள்ள 2020 ஹாரியர் பிஎஸ் 6 தர இன்ஜினுடன் ஆட்டோமேடிக் ஆப்ஷனும் தரப்பட்டு வெளிவருகிறது. டிசைனில் முந்தைய மாடலில் இருந்து எந்த மாற்றமும் இல்லை. இதில் புதிய 17 அங்குல அலாய் வீல்களும், புதிய விங் மிரர்களும் தரப்பட்டுள்ளன.

கேபினிலும் முந்தைய மாடலில் உள்ள அதே அம்சங்கள் இதிலும் தொடர்கின்றன. சில அப்டேட்கள் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளன. பானரோமிக் சன் ரூஃப் வசதி சேர்க்கப்பட்டுள்ளது.

ஏழு வேரியன்ட்களில் புதிய 2020 டாடா ஹாரியர் எஸ்யூவி கிடைக்கிறது. இந்தப் புதிய எஸ்யுவியில் செனான் எல்இடி புரொஜெக்டர் ஹெட்லேம்ப், ஃபாலோ மீ ஹோம் ஹெட்லேம்ப், ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, 8.8 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை உள்ளன.

ஒன்பது ஸ்பீக்கர் ஜேபிஎல் சவுண்ட் சிஸ்டம், 7 அங்குல செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் ஆகியவை உள்ளன. மேலும் பானரோமிக் சன் ரூஃப், கீ-லெஸ் என்ட்ரி, புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப், ஆட்டோமெடிக் கிளைமேட் கன்ட்ரோல் ஆகியவை உள்ளன.

மேம்படுத்தப்பட்ட இதன் பிஎஸ் 6 இன்ஜின் 173 பிஹெச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வெளிப் படுத்தும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. இதில் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் என இரண்டு டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுமே உள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in