Published : 16 Mar 2020 08:26 AM
Last Updated : 16 Mar 2020 08:26 AM

நிசானின் ஜீரோ டிஸ்சார்ஜ் உற்பத்தி

சர்வதேச ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனமான நிசான் - ரெனால்ட் ஒரகடத்தில் உள்ள உற்பத்தி ஆலையில் சுற்றுச்சூழல் சார்ந்த பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்துவருகிறது. அவற்றில் ஜீரோ டிஸ்சார்ஜ் உற்பத்தி என்பது முக்கியமானது. ஒரு கார் உற்பத்தி செய்ய 3,000 லிட்டர் வரை தண்ணீர் செலவாகும்.

தண்ணீர் தட்டுப்பாடும் தண்ணீர் குறித்த சூழலும் மிகமோசமாக உள்ள நிலையில், கார் உற்பத்தியில் தண்ணீரின் பயன்பாட்டை மிகவும் கவனமாக நிசான் - ரெனால்ட் நிறுவனம் கையாண்டு வருகிறது. ஆலைக்குள்ளேயே 1.9 லட்சம் கிலோ லிட்டர் தண்ணீரை சேமிக்கும் அளவுக்கு குளம் வெட்டி அதில் மழைநீரை சேகரித்து உற்பத்திக்குப் பயன்படுத்திவருகிறது.

அதேபோல் உற்பத்திக்குப் பயன்படுத்தப்பட்ட தண்ணீரை கழிவாக அப்படியே வெளியேற்றாமல், அதை ஆலைக்குள்ளேயே சுத்திகரித்து பயன்படுத்துவதோடு எஞ்சிய கழிவை வலுவான ஆவிப்படுத்தல் கலத்தின் மூலம் ஆவியாக்கிவிடுகிறது. இதன் மூலம் ‘ஜீரோ டிஸ்சார்ஜ் ’ உற்பத்தியை நிசான் தன் ஆலையில் செயல்படுத்துகிறது.

ரேஞ்ச்ரோவர் எவோக் பிஎஸ் 6

எஸ்யுவிகளில் தனித்துவமான டிசைன் மற்றும் பெர்பாமென்ஸ் கொண்ட ரேஞ்ச்ரோவர் எவோக் - தற்போது பிஎஸ்6 இன்ஜினுடன் புதிய பிளாட்பார்மில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இந்தப் புதிய எவோக் டிசைனைப் பொறுத்தவரை ரேஞ்ச்ரோவர் வெலாரின் சில அம்சங்களைக் கொண்டிருக்கிறது. கிரில், பம்பர் உள்ளிட்டவற்றில் அதை கவனிக்கலாம்.

இதில் 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் உள்ளது. இது 180பிஹெச்பி திறனைவெளிப்படுத்தக் கூடியது. தற்போதுடீசல் மாடல் மட்டுமே விற்பனைக்கு வந்துள்ளது. பெட்ரோல் வெர்சன் விரைவில் வர உள்ளது. பெட்ரோல் மாடலில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின்பயன்படுத்தப்பட்டுள்ளது.

இது 249 பிஹெச்பி திறனை வெளிப்படுத்துகிறது. மேலும் 48வோல்ட் மைல்டு ஹைபிரிட் சிஸ்டத்தோடு இணைக்கப்பட்டிருக்கிறது.9 ஸ்பீடு கியர்பாக்ஸ் உள்ளது.

பவர்டு டெயில் கேட், பானராமிக் சன் ரூஃப், 18 அங்குல அலாய் வீல், டூயல் ஸோன் கிளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், 10 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட், JLR கனெக்ட் Pro உள்ளிட்ட அம்சங்கள் இதில் உள்ளன.

இதுதவிர டெரைன் ரெஸ்பான்ஸ் சிஸ்டம், 6 காற்றுப்பைகள், ஏபிஎஸ் இபிடி பிரேக்கிங் சிஸ்டம், ஹில் அசிஸ்டென்ட் மற்றும் டிசெண்ட் கன்ட்ரோல், பார்க்கிங் சென்ஸார், லேன் அசிஸ்ட் ஆகிய பாதுகாப்பு அம்சங்களும் உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x