

1621-ம் ஆண்டு பிறந்த ஜீன் டி லா ஃபோன்டைன் பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த கவிஞர் மற்றும் கற்பனையாளர் ஆவார். பிரெஞ்சு மொழியின் அமைப்பைப் புரிந்துகொண்டு அதில் நிபுணத்துவம் பெற்ற பிரெஞ்சு கவிஞர்களில் முதன்மையானவர். தனது நீதிக்கதைகள் மற்றும் கற்பனைக் கதைகளுக்காக இவர் பெரிதும் அறியப்படுகிறார்.
இவரது படைப்புகள் பிரெஞ்சு பிராந்திய மொழிகளுக்கும், ஐரோப்பா முழுவதிலும் உள்ள கற்பனையாளர்களுக்கும் ஒரு எடுத்துக்காட்டாக விளங்கின. 1695-ம் ஆண்டு மறைந்த இவர், பதினேழாம் நூற்றாண்டின் மிகவும் பரவலாக அறியப்பட்ட பிரெஞ்சு கவிஞர்களில் ஒருவராக விளங்கியவர்.
* உண்மையான அன்பு என்பது அரிது, உண்மையான நட்பு அதனினும் அரிதானது.
* சத்தமில்லாமல் அமைதியாக இருக்கும் நபர்கள் ஆபத்தானவர்கள்.
* வலிமை அல்லது ஆர்வத்தை விட பொறுமை மற்றும் நேரம் ஆகியன அதிகம் செய்கின்றன.
* விவேகமற்ற நண்பரை விட ஆபத்தானது வேறு எதுவுமில்லை; ஒரு விவேகமான எதிரி கூட விரும்பத்தக்கவரே.
* ஒருவர் செய்யும் வேலையின் மூலமாக அவரைப் பற்றி அறிந்துகொள்ளலாம்.
* யாரையும் அவர்களின் வெளிப்புற தோற்றத்தால் மதிப்பிடுவதில் எச்சரிக்கையாக இருங்கள்.
* வலிமையானவரின் வாதம் எப்போதும் சிறந்தது.
* அறிவார்ந்தவரை மரணம் ஒருபோதும் ஆச்சரியத்தில் ஆழ்த்தாது, அவர் எப்போதும் மரணிக்க தயாராகவே இருப்பார்.
* ஏமாற்றுபவனை ஏமாற்றுவது இரண்டு மடங்கு மகிழ்ச்சி.
* காலத்தின் சிறகுகளில் சோகம் பறந்து சென்றுவிடுகிறது.
* புத்திசாலித்தனமான மனிதர்களுக்கு பயனற்றது என்று எதுவுமில்லை.
* மக்கள் ஒருவருக்கொருவர் உதவ வேண்டும்; இது இயற்கையின் விதி.
* உண்மையான நண்பரை விட இனிமையானது வேறு எதுவுமில்லை.