வெற்றி மொழி: ஃபிரான்ஸ் காஃப்கா    

வெற்றி மொழி: ஃபிரான்ஸ் காஃப்கா    
Updated on
1 min read

1883-ம் ஆண்டு பிறந்த ஃபிரான்ஸ் காஃப்கா புகழ்பெற்ற நாவலாசிரியர் மற்றும் சிறுகதை எழுத்தாளர். இருபதாம் நூற்றாண்டு இலக்கியத்தின் முக்கிய நபர் களில் ஒருவராகவும், கலாச்சார ரீதியாக செல்வாக்கு மிக்க எழுத்தாளராகவும் பரவலாக மதிப்பிடப்பட்டவர்.

தனது படைப்புகளில் சிலவற்றை மட்டுமே தனது வாழ்நாளில் வெளியிட்டார், இவரது பெரும்பாலான படைப்புகள் இவரது மரணத்துக்குப் பிறகு இவரது நண்பரால் வெளி யிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. காசநோயால் பாதிக்கப்பட்டு 1924–ம் ஆண்டு தனது நாற்பதாவது வயதில் மறைந்தார்.

இவரது படைப்புகள் 20 மற்றும் 21-ம் நூற்றாண்டுகளின் ஏராளமான எழுத்தாளர்கள், விமர்சகர்கள், கலைஞர்கள் மற்றும் தத்துவவாதிகளிடையே தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

* சரியானதுடன் தொடங்குங்கள், மாறாக ஏற்றுக்கொள்ளக்கூடியதுடன் அல்ல.
* ஒரு புத்தகம் உறைந்த கடலுக்கான கோடரியாக நமக்குள் செயல்பட வேண்டும்.
* இல்லாத ஒன்றை உணர்ச்சியுடன் நம்புவதன் மூலமாக நாம் அதை உருவாக்குகிறோம்.
* இல்லாதது என்பது நாம் போதுமான அளவுக்கு விரும்பாததே.
* எது நமது கவனத்தை திசை திருப்புகிறதோ அதுவே தீமை.
* அழகைக் காணும் திறனை தன்னுள் வைத்திருக்கும் எவருக்கும் ஒருபோதும் வயதாகாது.
* உங்களால் முன்பு செய்ய முடியாத விஷயங்களை இப்போது செய்ய முடிவதே உற்பத்தித்திறன்.
* உண்மை மற்றும் பொய் என இரண்டு விஷயங்கள் மட்டுமே உள்ளன.
* ஒவ்வொருவராலும் உண்மையைப் பார்க்க முடியாது, ஆனால் அவர்களால் உண்மையானவராக இருக்க முடியும்.
* பல புத்தகங்கள், ஒருவரின் சொந்த கோட்டைக்குள் உள்ள அறியப்படாத அறைகளுக்கான சாவி போன்றது.
* நடப்பதன் மூலமாகவே பாதைகள் உருவாக்கப்படுகின்றன.
* ஒருவர் இன்னும் வாழவில்லை என்பதால், அவர் இறப்பதற்கு மிகவும் பயப்படுகிறார்.
* எனக்கு என்ன தெரியுமோ, அதையே நான் பயன்படுத்த விரும்புகிறேன்.
* கருத்துகளுக்கு நீங்கள் அதிக கவனம் செலுத்தக் கூடாது.
* எல்லாவற்றையும் உண்மை என்று ஏற்றுக்கொள்வது அவசியமில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in