

1935-ம் ஆண்டு பிறந்த எல்விஸ் பிரெஸ்லி அமெரிக்காவைச் சேர்ந்த இசைக்கலைஞர் மற்றும் நடிகர் ஆவார். இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான கலாசார சின்னமாக விளங்கியவர். இசைப்பதிவுகள், திரைப்படங்கள், மேடை மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என அனைத்து இசை வடிவங்களிலும் முத்திரை பதித்தவர்.
பதிவுசெய்யப்பட்ட இசை வரலாற்றின் விற்பனையில் பெரும் சாதனை புரிந்தவர். கிராமி விருதுகள் உட்பட பல்வேறு விருதுகளையும் கௌரவங்களையும் பெற்றுள்ளார். தனது பல்வகைத் திறனுடைய குரலால் இசை ரசிகர்களை கவர்ந்த பிரெஸ்லி, 1977-ம் ஆண்டு தனது 42-வது வயதில் மறைந்தார்.
* உண்மை சூரியனைப் போன்றது. நீங்கள் அதை ஒரு நேரத்திற்கு மறைத்துவிடலாம், ஆனால் அது விலகிப்போவதில்லை.
* விஷயங்கள் தவறாக நடக்கும்போது, அவற்றுடன் செல்ல வேண்டாம்.
* நீங்கள் ஒருவரை நேசித்தலும் மற்றும் அவர்களுக்கு உண்மையற்றவராக இருத்தலும் சோகமான விஷயம்.
* மதிப்புடன் நினைவில் கொள்ளத்தக்க வகையில் ஏதாவது செய்யுங்கள்.
* எதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லையோ அதை விமர்சிக்க வேண்டாம்.
* மதிப்புகள் என்பவை கைரேகைகள் போன்றவை. யாருடையதும் ஒரே மாதிரியானது அல்ல.
* உங்கள் தலைக்கணத்தை நீங்கள் அதிகரிக்க அனுமதித்தால், அது உங்கள் கழுத்தை உடைக்கும்.
* உருவம் ஒரு விஷயம், மனிதன் இன்னொரு விஷயம். ஒரு உருவத்திற்கு ஏற்ப வாழ்வது மிகவும் கடினம்.
* ஒரு மனிதனை அவனது பலவீனம் அல்லது செயலால் தீர்மானிப்பது என்பது கடலின் சக்தியை ஒரு அலையின் மூலமாக தீர்மானிப்பதைப் போன்றது.
* உங்களிடம் எவ்வளவு இருக்கிறது என்பது மக்களை உங்களை கவனிக்க வைக்காது, நீங்கள் யார் என்பதே கவனிக்க வைக்கும்.
* சந்தேகத்திற்கிடமான மனதில் நம்மால் நமது கனவுகளை உருவாக்க முடியாது.
* மக்களுக்குப் புரியாத விஷயங்களைப்பற்றி பேசினால், நீங்கள் பைத்தியம் பிடித்தவர்கள் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.
* வாழ்க்கை என்பது அன்பு, அன்பு என்பது வாழ்க்கை.