Published : 31 Aug 2015 11:03 AM
Last Updated : 31 Aug 2015 11:03 AM

வெற்றி மொழி: எபிக்டீடஸ்

பிக்டீடஸ் ஒரு புகழ்பெற்ற கிரேக்க தத்துவஞானி. அவரது உண்மையான பெயர் அறியப்படவில்லை. இன்றைய துருக்கியில் ஒரு அடிமையாகப் பிறந்த அவர், தனது மிகச்சிறந்த தத்துவங்களால் அறியப்படுகிறார். இவரது தத்துவம், அனைத்து வெளிப்புற நிகழ்வுகளும் விதியால் தீர்மானிக்கப்படுகிறது, மேலும் அது நமது கட்டுப்பாட்டை மீறியது என்றும் அதனை அமைதியாகவும் உணர்ச்சி வசப்படாமலும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் சொல்கிறது.

அதேசமயம், மனிதர்களின் தனிப்பட்ட செயல்களுக்கு அவர்களே பொறுப்பு, அவற்றை கடுமையான சுய ஒழுக்கத்தின் மூலம் ஆராய்ந்து கட்டுப்படுத்த முடியும் என்பது இவரது கொள்கையாகும்.

நீங்கள் என்னவாக வேண்டும் என்பதை முதலில் உங்களுக்குள்ளே சொல்லிக்கொள்ளுங்கள்; பின்பு நீங்கள் என்ன செய்யவேண்டுமோ அதை செய்யுங்கள்.

நமது விருப்பத்தின் சக்திக்கு அப்பாற்பட்ட விஷயங்களைப் பற்றிய கவலைகளை நிறுத்துவதே நமது மகிழ்ச்சிக்கான ஒரே வழி.

நாம் விரும்பியபடி வாழும் உரிமையை விட வேறு சுதந்திரம் ஏதாவது இருக்கிறதா? வேறு எதுவுமில்லை.

மற்றொருவரின் தவறினால் எப்பொழுது நீங்கள் எரிச்சலடைகிறீர்களோ, அப்பொழுது உங்கள் தவறுகளை ஆராய்ந்துப் பாருங்கள். பிறகு உங்களது கோபத்தை நீங்கள் மறந்துவிடுவீர்கள்.

மனிதர்கள் அவர்களுக்கு ஏற்படும் விஷயத்தை எவ்வாறு அணுகுகிறார்கள் என்பதை பொருத்தே, அவர்களுக்கான பாதிப்பு இருக்கின்றது.

உங்கள் செயல்பாட்டுக்கு உங்களிடமுள்ள சக்தியை முழுமையாக சிறந்த முறையில் பயன்படுத்துங்கள் பின்பு அது நடக்கும்போது ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்.

உங்களுக்கு என்ன நடக்கிறது என்பது பெரிய விஷயமல்ல, அதற்கான உங்களின் நடவடிக்கை என்ன என்பதே முக்கியம்.

நீங்கள் என்ன சொல்லப்போகிறீர்கள் என்பதற்கான அர்த்தத்தை முதலில் அறிந்துகொள்ளுங்கள், பிறகு பேசுங்கள்.

அதிகமாகவோ அல்லது அடிக்கடியோ அல்லது ஆர்பாட்டமாகவோ சிரிக்காதீர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x