

பஜாஜ் நிறுவனத்தின் புகழ் பெற்ற தயாரிப்பான ‘சேடக்’, சில மாதங்களுக்குமுன் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது அதற்கான முன்பதிவு கடந்த வாரம் தொடங்கியுள்ளது.
‘சேடக்’ அர்பன், பிரீமியம் என இரண்டு மாடல்களில் வெளிவருகிறது. அர்பன் மாடலில், அதன் இரு சக்கரங்களிலும் டிரம் பிரேக்கும், பிரீமியம் மாடலில் முன்சக்கரத்தில் டிஸ்க் பிரேக்கும் பொருத்தப்பட்டு இருக்கும். அர்பன் மாடல் ரூ.1 லட்சம் எனவும், பிரீமியம் ரூ.1.15 லட்சம் எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. மொத்தமாக ரெட், நீலம், சில்வர், புரூக்ளின் பிளாக், சைபர் ஒயிட், சிட்ரஸ் ரஷ் என 6 நிறங்களில் கிடைக்கும்.
ஆரம்பகட்டமாக புணே, பெங்களூரு நகரங்களில் கேடிஎம் டீலர்ஷிப் வழியாக விற்பனை செய்யப்பட உள்ளன. ரூ.2,000 செலுத்தி முன்பதிவு செய்துகொள்ளலாம்.
அர்பன் மாடலின் எலக்ட்ரிக் மோட்டார் 3.8 கிலோ வாட்ஸ் திறனையும், பிரீமியம் மாடலின் எலக்ட்ரிக் மோட்டார் 4.08 கிலோ வாட்ஸ் திறனையும் கொண்டிருக்கின்றன. 5 மணி நேரத்தில் இதன் பேட்டரி முழுதாக சார்ஜ் ஆகிவிடும். ஸ்போர்ட் மற்றும் எகோ என்ற இரு பயணத் தேர்வு வகைகளைக் இந்த மாடல்கள் கொண்டிருக்கும்.
ஒரு முறை சார்ஜ் செய்தால் ஸ்போர்ட் மோடில் 85 கிமீ தூரம் வரையிலும், எகோ தேர்வில் 95 கிமீ தூரமும் வரையிலும் பயணிக்க முடியும். இதன் ஸ்மார்ட் எல்இடி டிஸ்பிளே பல நவீன சிறப்பம்சங்களைக் கொண்டிருக்கிறது. ஸ்மார்ட் போனை இந்த ஸ்கூட்டருடன் இணைத்துக்கொள்ள முடியும். நேவிகேஷன், டிராக்கிங் போன்ற பல சிறப்பம்சங்கள் இதில் உள்ளன.