

ஹார்லி டேவிட்ஸன் என்றாலே ஒரு தனி வரவேற்பு உண்டு. சாலையில் வந்தால் திரும்பிப் பார்க்காத இளைஞர்கள் இல்லை. தற்போதைய விஷயம் என்னவென்றால் சீன நிறுவனமான ஜெஜியாங் கியாஞ்சியாங் நிறுவனத்துடன் இணைந்து புதிய மாடல் ஒன்றை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
இந்தச் சீன நிறுவனம்தான் புகழ்பெற்ற இத்தாலிய நிறுவனமான பெனலியின், ஆசியச் சந்தை உரிமையைப் பெற்று தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் அந்நிறுவனத்துடன் ஹார்லி டேவிட்ஸன் கூட்டணி வைத்திருப்பது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் ஜூன் மாதம் ஹார்லி டேவிட்ஸனின் 338 சிசி பைக் அறிமுகமாக உள்ளது.
முதலில் இது சீனாவில் அறிமுகமாகும். அதைத் தொடர்ந்தே இந்தியாவுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய மாடல் பெனலி 300 சிசி-யின் சிறப்பம்சங்களைக் கொண்டிருக்கும் என்று தகவல் வெளிவருகின்றன. ஹார்லே டேவிட்ஸனில் இருந்து வெளிரும் குறைவான சிசி கொண்ட பைக்காக இது இருக்கும்.