

போக்ஸ்வேகன், அடுத்த இரண்டு வருடத்துக்குள் புதிய 4 எஸ்யூவி மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளது. பிப்ரவரி மாதம் நடக்க உள்ள வாகனக் கண்காட்சியில் இந்த நான்கு மாடல்களும் காட்சிப்படுத்தப்பட உள்ளன.
ஃபோக்ஸ்வேகன் டி-ஆர்ஓசி, டிகுவான் ஆல்ஸ்பேஸ், இடி கிராஸ் எலெக்டிரிக் எஸ்யூவி ஆகிய மூன்று மாடல்களை அறிமுகப்படுத்த இருப்பதாக அறிவித்து இருந்த நிலையில் தற்போது அந்த வரிசையில் புதிய மாடல் ஒன்று இணைந்துள்ளது.
ஏ0 எஸ்யூவி. தென் அமெரிக்கா, சீனாவில் புழக்கத்தில் இருக்கும் எம்க்யூபி வகை மாடல்களை இந்தியச் சந்தைக்கு ஏற்றவாறு மாற்றங்கள் செய்தே ஏ0 மாடலாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது. 130 ஹெச்பி மற்றும் 1.5 லிட்டர் இவிஓ டிஎஸ்ஐ பெட்ரோல் இன்ஜினைக் கொண்டிருக்கும். ஏ0 மாடல் அடுத்த ஆண்டு செப்டம்பரில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் வடிவைப்பு ஸ்கோடாவின் காமிக் மாடலைப் போல் இருக்கும் என்று கூறப்படுகிறது. கியா செல்டோஸ், ஹூண்டாய் கிரெட்டா, டாடா ஹாரியர், எம்ஜி ஹெக்டார், ரெனால்ட் காப்டுர், நிசான் கிக்ஸ் ஆகிய மாடல்களுக்குப் போட்டியாக ஏ0 எஸ்யூவி திகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.