

ஸ்கூட்டர் சந்தையில் ஆக்டிவா செய்த சாதனை மிகப் பெரியது. பெரும்பாலான வாகன ஓட்டிகளைச் சென்றடைந்த ஆக்டிவா தற்போது தனது ஆறாவது தலைமுறை மாடலை வெளியிட உள்ளது.
இது பிஎஸ் 6 தரத்துடன் வெளிவருவது கூடுதல் சிறப்பு. மேலும் டிசைனிலும், கலர் ஆப்ஷன்களிலும் மாற்றங்கள் இருக்கலாம் எனத் தெரிகிறது.
110சிசி திறன் கொண்ட இதன் இன்ஜின் 8000 ஆர்பிஎம்மில் 7.79 ஹெச்பி பவரை வெளிப்படுத்தக்கூடியதாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அளவிலும் தற்போதுள்ள 5ஜி மாடலைக் காட்டிலும் வித்தியாசங்கள் உள்ளன. வீல்பேஸ் 22மிமீட்டர் அதிகரிக்கப்பட்டு 1260மிமீட்டராகவும், நீளம் 1833 மிமீட்டர், அகலம் 697 மிமீ, உயரம் 1156 மிமீ என்ற அளவுகளில் ஆறாம் தலைமுறை ஆக்டிவா உள்ளது. அளவுகள் மாறுவதால் டிசைனிலும் மாற்றங்கள் இருக்கும். முந்தைய மாடல்களைவிட ஸ்டைலாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கலாம். இதன் பிற விவரங்கள் வரும் ஜனவரி 15-ம் தேதி அறிமுகப்படுத்தப்படும்போது தெரியவரும்.