

டிசம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ஹூண்டாய் ஆராவுக்கான முன்பதிவு ஆரம்பமாகியுள்ளது. செடான் மாடலான ஆரா 12 வேரியண்ட்களில் வெளிவருகிறது. ஆரா மூன்று வகையான இன்ஜின்களில் கிடைக்கும்.
1 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மேனுவல் கியர்பாக்ஸுடனும், 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் வேரியன்ட்டுகள் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ்களுடன் வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 4 மீட்டருக்கும் குறைவான நீளத்தில் உள்ள இந்த மாடால், கிராண்ட் ஐ10 நியோஸ் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதன் விலை ரூ.7 லட்சம் முதல் ஆரம்பமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி சுசூகி டிசையர், ஹோண்டா அமேஸ், டாடா டிகோர் மற்றும் ஃபோர்டு ஆஸ்பையர் ஆகிய மாடல்களுக்கு போட்டியாக ஹூண்டாய் ஆரா திகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரூ.10,000 செலுத்தி இணையதளம் வழியாகவோ அருகிலுள்ள முகவர்கள் மூலமாகவோ முன்பதிவு செய்துகொள்ளலாம். ஆரா வரும் ஜனவரி 21 சந்தைக்கு வரவுள்ளது.