பென்ஸ் கார்களுக்கேற்ற பிரம்மாண்ட விற்பனையகம் டைட்டானியம்

பென்ஸ் கார்களுக்கேற்ற  பிரம்மாண்ட விற்பனையகம் டைட்டானியம்
Updated on
2 min read

மெர்சிடெஸ் பென்ஸ் தரை யில் பயணிக்கும் கப்பல் என்ற நினைப்புதான் வரும். சொகுசின் மற்றொரு பெயர் பென்ஸ் என்றால் அது மிகையில்லை. ஜெர் மனியின் தயாரிப்பான பென்ஸ் இன்று கோடீஸ்வரர்களின் அந்தஸ்தை பறைசாற்றும் வாகனமாக இந்திய சாலைகளில் வலம் வருகிறது. தாராள மயமாக்கலுக்குப் பிறகு இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதன் மற்றொரு அடையாளம்தான் பென்ஸ் விற்பனை ஆண்டுக்காண்டு அதிகரித்து வருவதாகும்.

கோடீஸ்வரர்களின் கார் என்றாகி விட்டபிறகு அதன் விற்பனையகமும் பிரம்மாண்டமாக இருக்கத்தானே செய்யும். கடந்த வாரம் சென்னையில் தொடங்கப்பட்ட டைட்டானியம் விற்பனை யகம் பென்ஸ் காரின் பாரம்பரியத்துக்கு சற்றும் பங்கம் வராத வகையில் பிரம்மாண்டமானதாக அமைந்துள்ளது. இரண்டு விற்பனையகங்கள் மற்றும் ஒரு பழுது நீக்கும் மையத்தை டைட்டானியம் திறந்துள்ளது.

ஆட்டோமொபைல் துறையில் நெடிய பாரம்பரியம் மிக்கது விஎஸ்டி மோட்டார்ஸ். அந்நிறுவனத்தின் துணை நிறுவனம்தான் டைட்டானியம்.

சென்னை அண்ணா சாலையில் மிகவும் புராதான கட்டிடங்களில் ஒன்று கோவ். 1916-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கட்டிடத்தை 1940ம் ஆண்டு விஎஸ்டி மோட்டார்ஸ் வாங்கியது. அங்குதான் விற்பனையகம் தொடங்கப்பட்டுள்ளது.

கட்டிடத்தின் புராதானம் கெடாமல் அதேசமயம் உள்புறம் பிரமிக்கத்தக்க வேலைப்பாடுகளுடன் இந்த விற்பனையகம் அமைந்துள்ளது. 15 ஆயிரம் சதுர அடியில் அமைந்துள்ள இந்த விற்பனையகத்தில் அதிகபட்சம் 5 கார்களை நிறுத்த முடியும்.

நகரின் மையப் பகுதியில் வாடிக் கையாளரின் வசதிக்காக இந்த விற்பனையகம் தொடங்கப்பட்டுள்ளது.

அதேசமயம் தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த புதிய இளம் வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக ஒக்கியம் துரைப்பாக்கத்தில் பெரிய விற்பனையகம் தொடங்கப்பட்டுள்ளது. 25 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இதில் நிறுவனத்தின் அனைத்து ரக மாடல்களையும் காட்சிப்படுத்தும் அளவுக்கு இட வசதி உள்ளது. இந்த விற்பனையக உருவாக்கத்துக்கு மட்டும் ரூ. 18 கோடி செலவிடப்பட்டுள்ளது.

லைட்டிங், பேனல் உள்ளிட்ட பெரும்பாலான பொருள்கள் அனைத்தும் ஜெர்மனியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன என்று டைட்டானியம் மோட்டார்ஸ் நிர்வாக இயக்குநர் அருண் சுரேந்திரா தெரிவிக்கிறார். இங்குள்ள காபி வழங்கும் இயந்திரம் கூட ஜெர்மனியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதாம்.

ஒக்கியம் துரைப்பாக்கத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் அமைந் துள்ளது பழுது நீக்கும் மையம். இங்கு ஒரே சமயத்தில் 27 கார்களை பழுது நீக்கும் வசதி உள்ளது. பெயிண்டிங் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் இது உள்ளடக்கியது. இரண்டு விற்பனையகம் மற்றும் ஒரு பழுது நீக்கும் மையத்துக்கான முதலீடு ரூ. 43 கோடியாகும்.

இங்குள்ள பணியாளர்கள் அனை வருமே புணேயில் உள்ள மெர்சிடெஸ் பென்ஸ் நிறுவனத்தில் பயிற்சி பெற்றவர்கள். விற்பனையகத்தில் பணிபுரியும் தொலைபேசி அழைப்பா ளருக்குக் கூட பென்ஸ் நிறுவனம் பயிற்சி அளித்துள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு சொகுசான கார்களை மட்டுமின்றி தங்களது காரை விற்பனை செய்யும் விற்பனையகமும் பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது பென்ஸ் நிறுவனம். அதேபோல விற்பனைக்குப் பிந்தைய சேவையும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. மெர்சிடெஸ் பென்ஸ் நிறுவனத்தின் எதிர்பார்ப்பை டைட்டானியம் நிச்சயம் பூர்த்தி செய்யும் என்பதில் சந்தேகமில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in