Published : 02 Dec 2019 01:39 PM
Last Updated : 02 Dec 2019 01:39 PM

சிட்ஃபண்ட் வருமானத்துக்கு வரி விலக்கு கிடையாதா?

சத்யா சொந்தானம்

பெரும்பாலானவர்களுக்கு சிட்ஃ பண்ட் மூலமான சேமிப்பு மிகவும் சவு கர்யமானதாக உள்ளது. சிட்ஃபண்ட் தொடர்பாக பல்வேறு புகார்கள் வெளிவருகிறது, பலர் ஏமாற்றப்பட்ட சம்பவங்களும் நிகழத்தான் செய்கின்றன. இருந்தாலும் சிட்ஃபண்ட் மூலம் கிடைக்கும் வருமானம் வரி விதிப்புக்கு உள்பட்டதா இல்லையா என்பது பலருக்கும் தெரிவதில்லை. வருமான வரி சட்டத்தின்கீழ் சிட்ஃபண்டு தொடர்பாக பல்வேறு நீதிமன்றங்களில் வழங்கப்பட்ட தீர்ப்புகள் மற்றும் நிபுணர்களின் கருத்துகளின் அடிப்படையில் சிட்ஃபண்ட் மூலமான வருமானத்துக்கு வரி விதிக்கப்படும் என்பது தெரியவந்துள்ளது.

வரி எப்படி கணக்கிடப்படும்?

சிட் திட்டத்தில் ஒரு குழுவாய் உறுப்பினர்கள் குறிப்பிட்ட தொகையை தொடர்ந்து (மாதந்தோறும்) சம அளவில் செலுத்துவர். மாதந்தோறும் ஏலம் நடத்தப்படும், இதில் சீட்டு சேர்ந்துள்ள உறுப்பினர்கள் குறிப்பிட தொகைக்கு ஏலம்கேட்பர். சீட்டின் ஏல மதிப்பில் அதிக தொகை கழிவு போக ஏலம் கேட்கும் உறுப்பினர்களுக்கு தொகை வழங்கப்படும். ஏல மதிப்பு தொகை கழிக்கப்பட்டு உறுப்பினருக்கு வழங்கப்படும். மீதியிருக்கும் ``கசிறு’’ எனப்படும் தொகை அனைத்து உறுப்பினர்களுக்கும் சமமாக பகிர்ந்துதரப்படும். இவ்விதம் பகிர்ந்தளிக்கப்படும் தொகை டிவிடெண்ட் (ஈவுத் தொகை) எனப்படுகிறது.

சீட்டு மூலம் பெறப்படும் ஈவுத் தொகைக்கு வருமான வரி விதிக்கப்படுமா? ஆனால் முன்னணி சிட்ஃபண்ட் நிறுவன இணையதளங்களில் ஈவுத் தொகையாகப் பெறப்படும் தொகைக்கு வருமான வரி கிடையாது என குறிப்பிட்டுள்ளது. இதை அப்படியே உறுதியாக கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாததற்கு சில காரணங்கள் உள்ளன.

ஏனெனில் வருமான வரிச் சட்டம் 56 விதியின்கீழ், எத்தகைய வருமானமும் வரி விலக்குக்கு உரியதல்ல என குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்விதம் வரும் வருமானம் மற்றும் ஊதியம், சொத்து மூலமான வருமானம், மூலதன ஆதாயம் ஆகிய அனைத்துமே பிற இனங்களின் கீழ் வரும் வருமானமாக (ஐஎப்ஓஎஸ்) கொள்ளப்படும். அடுத்து சில நீதிமன்ற தீர்ப்புகளில் சிட்ஃபண்ட் வருமானம் வரி விதிப்புக்குட்பட்டது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உதாரணத்துக்கு, சில நிகழ்வுகளில் அதாவது பரஸ்பரம் புரிதலுடன் பகிர்ந்து கொள்ளப்படும் ஈவுத் தொகைக்கு வரி கிடையாது என கூறப்படுகிறது. ஆனால், அதில் பரஸ்பரம் புரிதல் என்ற வாசகமானது கிளப்புகளுக்கு பொருந்தும். ஆனால் கிளப்பில் ஒன்றுக்கு மேற்பட்ட குழு உறுப்பினர்களிடையே நடைபெறும் பரிவர்த்தனை மூலம் கிடைக்கும் ஆதாயம் வரி விதிப்புக்குள்பட்டது என தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும், சென்னை உயர் நீதிமன்றம் வி. ராஜ்குமார் மற்றும் வருமான வரித்துறை ஆணையர் இடையிலான வழக்கில், சிட்ஃபண்ட் விஷயத்தில் பரஸ்பர கொள்கை என்பது சிட் ஃபண்ட் விஷயத்தில் அடங்காது என்றும், ஈவுத்தொகை வருமானமும் வரி விதிப்புக்குள்பட்ட வருமானமே என தீர்ப்பளித்துள்ளது.

தள்ளுபடியை தள்ளிவிடுங்கள்

மொத்த சீட்டு தொகையில் ஏலம் கேட்ட கசிறு தொகையை தள்ளிவிட்டு டிவி டெண்டாக பகிர்ந்து தரப்பட்ட தொகை வரி விதிப்புக்குட்பட்டதா என்பதற்கு தெளிவான பதில் இதுவரை இல்லை. இதுகுறித்து டாக்ஸ்மேன்.காம் என்ற இணையதளத்தின் துணை பொது மேலாளர் நவீன் வாத்வா கூறிய கருத்து: தள்ளுபடி செய்யப்பட்ட தொகையானது வட்டியாக கருதப்படும்.

அதாவது செலுத்திய தொகைக்கு கிடைக்கும் வட்டிதான் அது. அதன்படி ஒட்டுமொத்த ஈவுத் தொகை வருமானத்தில் கசிறு தொகையை கழித்துவிட்டு மீதியை வரி விதிப்புக்குட்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளார்.

வருமான வரி சட்டத்தின்படி, ஒரு குறிப்பிட்ட தொகையைப் பெற்று அதற்கு வட்டி செலுத்துவதை, அது உடனடியாக சேமிப்பாக செலுத்தப்பட்டு குறிப்பிட்ட காலம் வரை வருமானம் பெற்றால், அவ்விதம் பெறப்படும் வருமானம் அதாவது சேமிப்பு மூலம் பெறப்படும் வருமானம் குறிப்பிட்ட கடன் தொகைக்கானது என்பதாகும்.

சீ்ட்டில் ஏலம் கேட்கும் உறுப்பினர், குறிப்பிட்ட தொகையை தள்ளி கேட்பார். அவர் கேட்ட தொகை கசிறாக கருதப் படும். ஆனால் அவ்விதம் பெறப்படும் தொகையைக் காட்டிலும் அவர் கூடுதலான தொகையைத்தான் செலுத்துவார்.

இவ்விதம் ஏற்படும் வருமான இழப்பு வரி நடுநிலையாகக் கருதப்படும் என்றும் வாத்வா குறிப்பிட்டுள்ளார். இதன்படி ஒட்டுமொத்த வருமானம் (கசிறு போக பெறப்பட்ட ஈவுத் தொகை) ஆகியவற்றை கணக்கிட்டு அது ஐஎப்ஓஎஸ் விதியின்கீழ் வரி விதிப்புக்குள்ளாகும்.

ஒருவேளை இவ்விதம் கிடைக்கும் வருமானம் குறைவாக இருந்தால் அது இழப்பாக கருதப்பட்டு வரி விதிப்புக்குள்படாது. லாபத்துக்கு மட்டும் வரி விதிப்பது நஷ்டத்துக்கு வரி கிடையாது என்பது வரி விதிப்பில் சரியான அணுகுமுறையாக இருக்காது. ஒருவேளை சிட்ஃபண்ட் நிதிமூலம் கிடைக்கும் வருமானம் தொழிலுக்கு பயன்படுத்தப்பட்டு அதனால் இழப்பு ஏற்பட்டால் அது வணிக செலவினமாகக் கருதப்படும்.

சுனில் கித்வானி, பங்குதாரர், நாங்கியா ஆலோசகர் (ஆண்டர்சன் குளோபல்) கூறியது: சிட்ஃபண்ட் நிதி வருமானத்தை தொழிலில் பயன்படுத்தி அதை வணிக முதலீடாக காட்டும்பட்சத்தில் கடனுக்கான வட்டி தொகை தொழிலில் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும். இருந்தாலும் சிட் ஃபண்ட் வருமானம் வரி விதிப்புக்குட்பட்டதே. அது தொழில்மூலம் பெறப்படும் வருமானமாக வரித்துறை மதிப்பீட்டாளர் கருத மாட்டார் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேசமயம் சீட்டு திட்டம் மூலம் பெறப்படும் வருமானத்தை ஒரு தொழிலாகக் கருத முடியாது. எனவே இதை வணிக வருமானமாகக் கருத முடியாது என்ற கருத்தும் நிலவுகிறது. சிட்ஃபண்ட் வருமானமானது வரிவிதிப்புக்குட்பட்டது என்றாலும் அந்த வருமானமானது ஒரு நிதி ஆண்டுக்கு உட்பட்டதாயிருந்தால் மட்டுமே வரி விதிக்கப்படும் என்பதும் குழப்பமானதாக உள்ளது.

கிளியர் டேக்ஸ் நிறுவனத்தின் தலைமை ஆசிரியர் பிரீத்தி குராணா கூறுகையில், பொதுவாக வரி தாக்கல் செய்யும் நபர் சிட் ஃபண்ட் மூலம் பெறப்படும் வருமானம் ஒரு நிதி ஆண்டுக்கு உள்பட்டதா என்பதல்ல, சீட்டின் காலம் வரை கணக்கில் கொள்ளப்பட்டு அதன்மூலம் லாபம் ஈட்டப்பட்டதா அல்லது நஷ்டம் ஏற்பட்டதா என்பது சீட்டின் காலவரையறைக்குப் பிறகே தீர் மானிக்கப்படும் என்றார். இருப்பினும் ஈவுத் தொகை வருமானம் மற்றும் கழிவுத் தொகை ஆகியன ஒட்டுமொத்தமாகத்தான் கணக்கிடப்படும்.

பல்வேறு நீதிமன்ற தீர்ப்புகளில் ஈவுத் தொகை மற்றும் கழிவுத் தொகை ஆகியவை சதவீத அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது. சீட்டு முடியும் கால வரையறை அடிப்படையில் கணக்கிடப்படவில்லை.

உதாரணத்துக்கு சீட்டின் மதிப்பு ரூ. 2.4 லட்சம் என்றும் சீட்டு செலுத்தும் காலம் 24 மாதங்கள் என்றும் மாதாந்திர தவணை ரூ. 10 ஆயிரம் என்றும் வைத்துக் கொள்வோம். ஓராண்டு முடிவில் ரூ. 25 ஆயிரம் ஈவுத்தொகை பெற்றிருந்தால், நான்காவது மாதத்தில் சீட்டு தொகையை ரூ. 40 ஆயிரத்துக்கு தள்ளி எடுத்திருந்தால் மட்டுமே இது சாத்தியம்.

நிதி ஆண்டு கணக்கிடுகையில் ஈவுத் தொகை வருமானம் ரூ. 25 ஆயிரம், கசிறு தொகை ரூ. 16 ஆயிரம் என்றால் வருமானம் ரூ. 9 ஆயிரத்துக்கு வரி விதிக்
கப்படும். கசிறு தொகை ரூ. 16 ஆயிரம், எஞ்சிய 8 மாதங்களுக்கான ரூ. 40 ஆயி ரத்துக்கான தொகையைக் கணக்கில் எடுத்துக்கொண்டு கணக்கிடப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x