Published : 02 Dec 2019 01:18 PM
Last Updated : 02 Dec 2019 01:18 PM

வெற்றி மொழி: விஸ்டன் ஹக் ஆடென்

1907-ம் ஆண்டு இங்கிலாந்தில் பிறந்த விஸ்டன் ஹக் ஆடென் ஆங்கில அமெரிக்க கவிஞர், எழுத்தாளர், நாடக ஆசிரியர் மற்றும் பேராசிரியர். இலக்கியம், அரசியல், உளவியல் மற்றும் மதம் ஆகியவற்றில் கட்டுரைகள் மற்றும் மதிப்புரைகளை எழுதியுள்ளார். இவரது படைப்புகள் அதன் நவீனம் மற்றும் தொழில்நுட்ப சாதனைகளுக்காக பெரிதும் குறிப்பிடப்படுகின்றன.

மேலும் அரசியல், ஒழுக்கநெறிகள், அன்பு மற்றும் மதம் போன்றவற்றுடன் அதன் ஈடுபாடு மற்றும் தொனி, வடிவம் மற்றும் உள்ளடக்கம் ஆகிய அம்சங்களுக்காகவும் இவரது கவிதைகள் அறியப்படுகின்றன. இவர் 1973-ம் ஆண்டு தனது அறுபத்து ஆறாவது வயதில் மறைந்தார். இருபதாம் நூற்றாண்டின் முன்னணி இலக்கிய நபராக அறியப்படுபவர் இவர்.

# நாம் அனைவரும் பூமியில் மற்றவர்களுக்கு உதவுவதற்காக இருக்கிறோம்; மற்றவர்கள் இந்த பூமியில் எதற்கு இருக்கிறார்கள் என்பது பற்றி எனக்கு தெரியாது.
# உணர்ச்சிபூர்வமாக மொழியை நேசிக்கும் ஒரு நபரே கவிஞர் என்பவர்.
# நேரத்தை ஜீரணிப்பதற்கான சிறந்த வழி இசை.
# நல்லது தீமையை கற்பனை செய்யலாம்; ஆனால் தீமை நல்லதை கற்பனை செய்து பார்க்க முடியாது.
# ஒரு உண்மையான புத்தகம் நாம் படித்த ஒன்று அல்ல, நம்மைப் படிக்கும் புத்தகம்.
# உங்களிடம் இல்லாததை உங்கள் கனவுகளிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்.
#உரையாடலுக்கு மாற்றான புத்தகங்களுக்காக கடவுளுக்கு நன்றி.
# நாம் யார் என்பதை நாம் அனைவரும் திரும்பிப் பார்ப்பதில்லை.
# நீங்கள் என்ன செய்தாலும், நல்லதோ அல்லது கெட்டதோ, மக்கள் எப்போதும் எதிர்மறையான ஒன்றைச் சொல்வார்கள்.
# உங்கள் எண்ணங்கள் அனைத்தும் நன்றி சொல்பவையாக இருக்கட்டும்.
#சுதந்திரமாக இருப்பது என்பது பெரும்பாலும் தனிமையாக இருப்பது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x