ட்ரயம்பின் ராக்கெட் 3

ட்ரயம்பின் ராக்கெட் 3
Updated on
1 min read

இளைஞர்களின் பைக் மோகம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதற்கேற்றார்போல் என்ஃபீல்ட், ஜாவா, ஹார்லே டேவிட்சன், பெனல்லி, கேடிஎம், ட்ரயம்ப் உள்ளிட்ட மோட்டார் நிறுவனங்களும் அட்டகாசமான மாடல்களை அறிமுகம் செய்துகொண்டே இருக்கின்றன.

வரும் டிசம்பர் மாதத்தில் ட்ரயம்ப் நிறுவனத்தின் ராக்கெட் 3 மாடல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்தியாவில் ட்ரயம்ப் தனது ஆறாவது வருடத்தை நிறைவு செய்கிறது.

இந்தக் கொண்டாட்டத்தை ராக்கெட் 3 உடன் கொண்டாடப் போகிறது. 167 ஹெச்பி பவர், 221 என் எம் டார்க்கை வெளிப்படுத்தும் சூரனாக இந்த ராக்கெட் 3 இருக்கிறது. இதன் பிளாட்ஃபார்மே இந்தியாவுக்குப் புதியது. இதன் லிக்விட் கூல்டு இன்ஜின் 2500 சிசி திறன் கொண்டது. முந்தைய மாடல்களைக் காட்டிலும் இதன் எடை 40 கிலோ குறைவு என்பது கூடுதல் சிறப்பு.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in