

1883-ம் ஆண்டு பிறந்த நிகோஸ் கசன்ட்ஸாகிஸ், உலகின் தலை சிறந்த நாவலாசிரியர்களில் ஒருவர். கிரேக்கம் இவரது தாய் நாடு. தத்துவம் பயின்றவர். நாவலாசிரியர் என்பதைத் தவிர, நாடக ஆசிரியர், கவிஞர், பத்திரிகையாளர், மொழிபெயர்ப்பாளர் எனப் பல அடையாளம் கொண்டவர்.
வாழ்க்கையின் அர்த்தத்தை இறுதிவரை தேடிக் கொண்டிருந்த கலைஞன். இவருடைய படைப்புகள் அனைத்தும் அந்தத் தேடலை ஒட்டியதே. இவரது படைப்புகளில் மிகவும் புகழ்பெற்றவை ‘லாஸ்ட் டெம்ப்டேசன் ஆஃப் கிரைஸ்ட்’ மற்றும் ‘ஸோர்பா தி கிரீக்’. இவர் 1957-ம் ஆண்டு மறைந்தார். ஒன்பது முறை நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார்.
# பொறுமையாக இருங்கள். காலம் அனைத்தையும் நிகழ்த்தும்.
# உங்களிடம் கொஞ்சம் குழந்தைத்தனம் எப்போதும் இருக்கட்டும்.
# கொண்டாட்டமே வாழ்வின் சாராம்சம்.
# கடவுள் ஒவ்வொரு நொடியும் தன் தோற்றத்தை மாற்றிக்கொண்டிருக்கிறார். ஆசிர்வதிக்கப்பட்ட மனிதன் அவரை கண்டடைகிறான்.
# நான் எதையும் எதிர்பார்ப்பதில்லை. அதனால் நான் எதற்கும் அஞ்சுவது இல்லை.
# நிகழ்காலம் மட்டும்தான் உண்மை.
# அனைத்து கோட்பாடுகளின் இறுதி வடிவம் செயலாற்றுவதுதான். எனவே செயல்படுங்கள்.
# உங்களால் உலக யதார்த்தத்தை மாற்ற முடியாது. ஆனால் அதன் மீதான உங்கள் பார்வையை மாற்ற முடியும்.
# உங்களால் அடைய முடியாததை அடைய முயலுங்கள்.
# நாம் இருளில் இருந்து வருகிறோம். இருளில் முடிகிறோம். நடுவே உள்ள ஒளிக்கீற்றுதான் வாழ்க்கை.
# இந்த உலகில் உள்ள அனைத்தும் மறைமுக அர்த்தத்தை கொண்டிருக்கின்றன.