வெற்றி மொழி: வாஷிங்டன் இர்விங்

வெற்றி மொழி: வாஷிங்டன் இர்விங்
Updated on
1 min read

1783-ம் ஆண்டு முதல் 1859-ம் ஆண்டு வரை வாழ்ந்த வாஷிங்டன் இர்விங் அமெரிக்காவை சேர்ந்த சிறுகதை எழுத்தாளர், கட்டுரையாளர், மற்றும் வரலாற்றாசிரியர். மேலும், ஸ்பெயினில் அமெரிக்க தூதராகவும் பணியாற்றியுள்ளார். சிறுகதை வடிவத்தின் வளர்ச்சியில் செல்வாக்கு செலுத்தியதோடு, தனது சிறப்பான சிறுகதைகளுக்காக புகழ்பெற்றவராக அறியப் படுகிறார்.

மற்ற அமெரிக்க எழுத்தாளர்களுக்கு ஊக்கமளிப் பவராக இருந்ததோடு, ஐரோப்பாவில் பாராட்டுகளைப் பெற்ற முதன்மையான அமெரிக்க எழுத்தாளர்களில் இவரும் ஒருவராக விளங்கினார். எழுத்தாளர்களுக்காக தொடர்ந்து ஆதரவளிப்பவராக விளங்கியதோடு, எழுத்தாளர் களை பதிப்புரிமை மீறலில் இருந்து பாதுகாக்கக்கூடிய வலுவான சட்டதிட்டங்களுக்காக குரல் கொடுத்தார்.

# கண்ணீரில் ஒரு புனிதத்தன்மை இருக்கிறது. அவை பலவீனத்தின் அடையாளமல்ல, ஆற்றலின் அடையாளம்.
# இனிமையானது என்பது என்னவென்றால், தொலைதூர நண்பர்களின் நினைவாகும்.
# ஒரு கனிவான இதயம் மகிழ்ச்சியின் நீரூற்று, அது அருகிலுள்ள அனைத்தையும் புன்னகையாக மாற்றுகிறது.
# தொடர்ந்து கற்கவும், வளரவும் மிகச்சிறந்த மற்றும் எளிமையான கருவிகளில் ஒன்று அதிகமாக செயல்படுவது.
# சிறந்த மனமுடையவர்கள் நோக்கங்களைக் கொண்டுள்ளனர்; மற்றவர்களுக்கு விருப்பமே உள்ளது.
# அன்பு ஒருபோதும் இழக்கப்படுவதில்லை.
# சிறிய மனங்கள் துரதிர்ஷ்டத்தால் அடங்கி அடக்கப்படுகின்றன; ஆனால் சிறந்த மனங்கள் அவைகளுக்கு மேலாக உயர்கின்றன.
# போதுமான அளவு என்பது மிகவும் குறைவாக
இருக்கும் மனிதனுக்கு போதுமானதாக இருக்காது.
# வயது என்பது உணர்வின் விஷயம்; வருடங்கள் அல்ல.
# பயன்பாட்டுடன் கூர்மையாகக்கூடிய ஒரே கருவி நாக்கு மட்டுமே.
# ஒரு தாயே நமக்கு உண்மையான நண்பர்.
# பிரகாசமான மனதில் இருண்ட நிழல்களைக் கொண்டுவருவதற்கு இரவின் அமைதி மற்றும் தனிமை போன்று வேறு எதுவுமில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in