டொயோட்டா ரைஸ்: ஜப்பானில் இப்போ... இந்தியாவில் எப்போ?

டொயோட்டா ரைஸ்: ஜப்பானில் இப்போ... இந்தியாவில் எப்போ?
Updated on
1 min read

டொயோட்டாவின் புதிய மாடலான ரைஸ் இந்தியாவில் இன்னும் வெளிவராவிட்டாலும், ஜப்பானில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பார்ப்பவர்களை வியக்கவைக்கும் வகையில் அதன் தோற்ற வடிவமைப்பு உள்ளது. 3995 மிமீ நீளம், 1695 அகலம், 1620 உயரம் என ரைஸ் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

இதன் வீல்பேஸ் 2520 மிமீ ஆகும். இதன் 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின், 996 சிசி திறனைக் கொண்டிருக்கிறது. 98 ஹார்ஸ் பவரை 6000 ஆர்பிஎம்-ல் உற்பத்தி செய்யக்கூடியது. சிவிடி வகை கியர்பாக்ஸ் இதில் பொருத்தப்பட்டு உள்ளது. லிட்டருக்கு 18.6 கிலோ மீட்டர் மைலேஜ் தரக்கூடியது. ரைஸ் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

விபத்து சமயங்களில் பெரும் பாதிப்பில்லாமல் பயணிகள் தப்பிக்கும் வகையில் 6 ஏர்பேக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கின்றன. டிராக்ஸன் கன்ட்ரோல், எலக்ட்ரிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல், ஹில்ஸ்டார்ட் அஸிஸ்ட், பார்க்கிங் அஸிஸ்டண்ட், 360 டிகிரி கேமரா போன்ற அதி நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் இது வெளிவந்துள்ளது. இதன் லோயர் வேரி
யண்ட் 7 இன்ச் டிஸ்பிளேயையும், ஹையர் வேரியன்ட் 9 இன்ச் டிஸ்பிளேயையும் கொண்டு இருக்கிறது.

டொயோட்டா ரைஸ் இந்தியாவில் அறிமுகமாகும்பட்சத்தில், ஹூண்டாய் வென்யூ, மஹிந்திரா எக்ஸ்யூவி 300, டாடா நெக்ஸான், மாருதி சுசூகி விடாரா பிரெஸ்ஸா ஆகிய மாடல்களுக்கு போட்டியாகத் திகழும். வெள்ளை, கருப்பு, சில்வர், சிவப்பு மஞ்சள், டார்க் புளு உள்ளிட்ட எட்டு வண்ணங்களில் இது வெளிவருகிறது. எக்ஸ், எக்ஸ்எஸ், ஜி, இஸட் ஆகிய நான்கு வேரியண்ட்களில் விற்பனைக்கு உள்ளது. ஜப்பானில் இதன் விலை, இந்திய மதிப்பில் ரூ.11 லட்சம் முதல் ஆரம்பமாகிறது. இந்தியாவில் எப்போது அறிமுகப்படுத்தப்படும் என்று வாகன விரும்பிகள் ஆர்வமுடன் காத்து இருக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in