

பெனல்லி இத்தாலியைச் சேர்ந்த நூற்றாண்டு பழமைமிக்க இரு சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனம். பெரும்பாலும் வாகனப் பந்தயங்களை நோக்கமாகக் கொண்டே இந்நிறுவனம் அதன் தயாரிப்புகளை வடிவமைத்து வருகிறது. தற்போது லியான்சினோ 250 என்ற அதன் புதிய தயாரிப்பை இந்தியச் சந்தையில் களமிறக்கி உள்ளது. கேடிஎம் 390 டியுக் மற்றும் ராயல் என்ஃபீல்ட் இன்டர்செப்டர் ஆகியவற்றுக்கு போட்டியாக இது திகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
250 சிசியைக் கொண்டிருக்கும் இதன் இன்ஜின் 25.8 ஹார்ஸ் பவரை 9250 ஆர்பிஎம்-ல் உற்பத்தி செய்யக் கூடியது. 2030 மிமீ நீளம், 840 மிமீ அகலம், 1115 மிமீ உயரம் என்ற அளவில் வடிவமைக்கப்பட்டு இருக்கும் லியான்சினோ, சிவப்பு, வெள்ளை, பிரவுன், கிரே ஆகிய வண்ணங்களில் வெளிவருகிறது. இதன் பெட்ரோல் டேங் 12.5 லிட்டர் கொள்ளளவைக் கொண்டிருக்கிறது. லிட்டருக்கு 24 கிலோமீட்டர் மைலேஜ் கொடுக்கும் என்று கூறப்படுகிறது. இதன் விலை ரூ.2.5 லட்சம் ஆகும்.