

1260-ம் ஆண்டு முதல் 1328-ம் ஆண்டு வரை வாழ்ந்த மீஸ்டர் எக்ஹார்ட் ஜெர்மானிய இறையியலாளர், தத்துவவாதி மற்றும் ஆன்மிகவாதி ஆவார். இறையியல் சிந்தனைகள், பிரசங்கங்கள், ஆன்மிகம் மற்றும் உளவியல் தொடர்பான சொற் பொழிவுகள் போன்றவற்றிற்காகப் பெரிதும் அறியப்படுபவர்.
இவரது மாறுபட்ட அனுபவங்கள் மற்றும் நடைமுறை ஆன்மிக தத்துவங்கள் ஆகியவை இவரின் புகழுக்கான காரணங்களாக விளங்கின. தனது பிற்கால வாழ்க்கையில், மதங்களுக்கு எதிரானவராகக் குற்றம் சாட்டப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிகிறது. பதிமூன்றாம் நூற்றாண்டின் குறிப்பிடத்தக்க சிந்தனையாளர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார்.
* உங்கள் முழு வாழ்க்கையிலும் நீங்கள் சொல்லும் ஒரே பிரார்த்தனை நன்றி என்றால், அதுவே போதுமானது.
* உண்மையிலேயே, இருளில்தான் ஒருவர் ஒளியைக் கண்டுபிடிப்பார், எனவே நாம் துக்கத்தில் இருக்கும்போது, ஒளி நமக்கு மிக அருகில் இருக்கும்.
* சிந்தனையின் மண்ணில் நாம் எதை பயிரிடுகிறோமோ, அதையே செயலின் மூலம் நாம் அறுவடை செய்வோம்.
* நீங்கள் கடவுளை அன்பு என்று அழைக்கலாம், நீங்கள் கடவுளை நன்மை என்று அழைக்கலாம். ஆனால் கடவுளுக்கான சிறந்த பெயர் இரக்கம்.
* செயலற்றதன் விலை என்பது தவறு செய்தலின் விலையை விட மிகவும் அதிகம்.
*நீங்கள் மிகவும் பாது காப்பாக உணர்ந்தால் எதை செய்வீர்களோ, அதையே செய்யுங்கள்.
* புத்தகங்களால் தேர்ச்சிபெற்ற ஆயிரம் நபர்களை விட வாழ்க்கையில் தேர்ச்சி பெற்ற ஒருவர் சிறந்தவர்.
* சிந்திப்பதன் மூலமாக ஒரு மனிதன் எதை எடுத்துக்கொள்கிறானோ, அதை அவன் அன்பில் வெளிப்படுத்துகிறான்.
* அழிக்கும் கையால் மட்டுமே உண்மையான விஷயங்களை எழுதவும் முடியும்.
* நம்மிடம் நிறைய உள்ளன; அதில் குறைவானதே நமக்கு சொந்தமானவை.
* நீங்கள் நன்றாகச் செய்தால், நீங்கள் எங்கிருந்தாலும் நன்றாகச் செய்வீர்கள். நீங்கள் தோல்வியுற்றால், நீங்கள் எங்கிருந்தாலும் தோல்வியடைவீர்கள்.