

ட்வைட் டி ஐசனோவர் அமெரிக்காவின் முப்பத்தி நான்காவது அதிபராக 1953 ஆம் ஆண்டு முதல் 1961ஆம் ஆண்டு வரை இருந்தவர். பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிறந்த கடைசி அமெரிக்க ஜனாதிபதி இவரே. இரண்டாம் உலகப்போரின்போது அமெரிக்க இராணுவத்தில் ஐந்து நட்சத்திர அந்தஸ்து பெற்ற ஜெனரலாகவும், ஐரோப்பாவில் கூட்டுப்படைகளின் தலைமைத் தளபதியாகவும் பணியாற்றினார்.
நேட்டோவின் முதல் தலைமை தளபதி என்ற கௌரவமும் இவருக்கு உண்டு. விண்வெளி சாதனைகளுக்கு காரணமான நாசாவின் தொடக்கத்திற்கு வித்திட்டார். மாநிலங்களுக்கு இடையேயான நெடுஞ்சாலை அமைப்பினை தோற்றுவித்தார். மிகச்சிறந்த அமெரிக்க ஜனாதிபதிகளில் ஒருவராக கருதப்படுகிறார்.
$ தலைமை என்பதன் உயர்வான பண்பு கேள்விக்கிடமின்றிய ஒருமைப்பாடே. இது இல்லாமல் உண்மையான வெற்றி சாத்தியமல்ல.
$ திட்டங்கள் என்பதில் எதுவும் இல்லை; திட்டமிடல் என்பதிலேயே எல்லாம் இருக்கின்றது.
$ உங்களுக்கு முழுமையான பாதுகாப்பு வேண்டுமா? அப்படியானால் சிறைக்கு செல்லுங்கள். அங்குள்ள ஒரே குறை... சுதந்திரம் மட்டுமே.
$ போருக்கு தயாராகிக் கொண்டிருக்கும்போது, நான் எப்போதும் கண்டறியும் ஒரு விஷயம், திட்டங்கள் பயனற்றவை என்பதே. ஆனால் திட்டமிடல் தவிர்க்க முடியாதது.
$ மக்களின் தலையில் கொட்டிக்கொண்டிருப்பதன் மூலமாக அவர்களை உங்களால் வழி நடத்த முடியாது. அதற்குப்பெயர் தாக்குதலே தவிர தலைமைப்பண்பல்ல.
$ உலகம் நகர்ந்துக்கொண்டே இருக்கிறது. ஒருமுறை சொல்லப்பட்ட நல்ல கருத்துகள் எப்போதுமே நல்ல கருத்துகளாக இருப்பதில்லை.
$ நாம் அமைதியை பெறுவதற்காகவே போய்க்கொண்டிருக்கிறோம், அதற்காக சண்டைக்யிட்டுக் கொண்டாலும் கூட.
$ எப்பொழுது மாறுதலில்லாத நிலையினை கொண்டிருக்கிறீர்களோ, அப்பொழுது நிச்சயமான சில தடைகளை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
$ அமைதி மற்றும் நேர்மை ஆகியவை ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.
$ பலத்தால் மட்டுமே ஒத்துழைக்க முடியும், பலவீனத்தால் மன்றாடவே முடியும்.