

1819 முதல் 1880 ஆம் ஆண்டு வரை வாழ்ந்த ஆங்கிலேய எழுத்தாளர் ஜார்ஜ் எலியட். நாவலாசிரியர், பத்திரிகையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் போன்ற பன்முக திறனுடையவராக விளங்கினார். விக்டோரியா காலத்து பிரபலமான முன்னணி எழுத்தாளர்களில் ஒருவராக திகழ்ந்தார். மனித உளவியல் தொடர்பான அம்சங்கள் இவரது நாவலில் இடம்பெற்றிருந்தன.
மேலும், பொழுதுபோக்கிற்காக மட்டுமின்றி மனித நிலைகளை வெளிப்படுத்தும் விதமாகவும் அமைந்திருந்தது. பெண்களின் மிக நுட்பமான மன ஓட்டங்களை தனது எழுத்துகளில் பிரதிபலித்தவர். இவரது படைப்புகளில் உள்ள உண்மைத் தன்மைக்காக பெரிதும் பேசப்பட்டது.
$ நம்முடைய மரணத்தைப்பற்றி நாம் மறந்திருக்கும் வரை, அது ஒருபோதும் நமக்கானது அல்ல.
$ பிரிவின் வேதனையில் மட்டுமே நாம் அன்பின் ஆழத்தைக் காணமுடியும்.
$ பொய்மை எளிதானது, உண்மை மிகவும் கடினமானது.
$ ஒவ்வொரு பிரிவிலும் மரணத்தின் உருவம் இருக்கின்றது.
$ துணிச்சல் என்பது மனிதனுக்கு வெளியில் இருப்பதல்ல, அது அவனுக்குள்ளேயே இருப்பது.
$ ஒருபோதும் ரோஜாக்கள் மழையாகக் கொட்டப்போவதில்லை; எப்பொழுது நமக்கு அதிகப்படியான ரோஜாக்கள் தேவையோ, நாம் கண்டிப்பாக அதிகமான செடிகளை நட்டே ஆகவேண்டும்.
$ மிகப்பெரிய விஷயங்கள் உணர்ச்சி வேகத்தினால் செய்யப்படுபவை அல்ல; தொடர்ச்சியான சிறிய விஷயங்கள் ஒன்றிணைந்தே அவற்றைக் கொண்டு வருகின்றன.
$ விலங்குகள் மனதிற்கு உகந்த நண்பர்கள்; அவைகள் எந்த கேள்வியும் கேட்பதில்லை, எந்தவொரு விமர்சனமும் செய்வதில்லை.
$ ஒரு செயலுக்குக் கிடைக்கும் வெகுமதியானது மற்றொரு செயலை நிறைவேற்றத் தேவையான சக்தியாகின்றது.
$ ஆடம்பரம் பற்றி தெரிந்துகொள்ள விரும்பும் ஒருவன், கண்டிப்பாக ஏழையாக இருக்க வேண்டும்.
$ ஒரு சிறந்த மொழியானது பெரும்பாலும் எளிய வார்த்தைகளாலேயே உருவாக்கப் படுகின்றது.
$ வளர்ச்சிக்கான வலிமையான கொள்கை மனிதனின் தேர்விலேயே இருக்கின்றது.