வெற்றி மொழி: ராபர்ட் ஏ ஹெய்ன்லின்

வெற்றி மொழி: ராபர்ட் ஏ ஹெய்ன்லின்
Updated on
1 min read

1907-ம் ஆண்டு முதல் 1988-ம் ஆண்டு வரை வாழ்ந்த ராபர்ட் ஏ ஹெய்ன்லின் அமெரிக்காவைச் சேர்ந்த அறிவியல் புனைகதை எழுத்தாளர், வானியல் பொறியாளர் மற்றும் ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி ஆவார். தனது படைப்புகளில் சமூகம், அரசியல், தனிமனித சுதந்திரம் மற்றும் தன்னிறைவு போன்றவற்றை முன்னிறுத்தியுள்ளார்.

பொதுவாக இவரது படைப்புகள் அறிவியல் புனைகதை வகைகளில் மட்டுமின்றி, நவீன கலாச்சாரத்திலும் செல்வாக்கு செலுத்துபவையாக உள்ளன. அறிவியல் புனைகதை எழுத்தாளர்களின் முன்னோடியாகக் கருதப்படும் இவரது புத்தகங்கள் இன்றும் வாசகர்களிடையே சிறப்பான வரவேற்பினைப் பெற்றுள்ளன.

# உங்கள் குழந்தைகளுக்கு வாழ்க்கையை மிகவும் எளிதாக்குவதன் மூலமாக அவர்களை முடக்க வேண்டாம்.
# நான் சுதந்திரமாக இருக்கிறேன், ஏனென்றால் நான் செய்யும் எல்லாவற்றுக்கும் நான் மட்டுமே தார்மீக பொறுப்பு என்று எனக்குத் தெரியும்.
# பொறாமை ஒரு நோய், அன்பு ஒரு ஆரோக்கியமான நிலை.
# மனித முட்டாள் தனத்தின் சக்தியை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள்.
# தற்செயலாக ஒருபோதும் யாரையும் அவமதிக்க வேண்டாம்.
# கோட்பாட்டளவில் அனைத்தும் சாத்தியமற்றதே, அது செய்யப்படும் வரை.
# நீங்கள் விரும்பும் வரை வாழுங்கள், நீங்கள் வாழும் வரை அன்பு செலுத்துங்கள்.
# என்னுடன் உடன்பட்ட ஒரு மனிதரிடமிருந்து நான் ஒருபோதும் கற்றுக்கொள்வதில்லை.
# மிக விரைவில் சரியாக இருப்பது என்பது சமூக ரீதியாக ஏற்றுக்கொள்ள
முடியாதது.
# ஒரு பன்றிக்கு பாடக் கற்றுக்கொடுக்க ஒரு போதும் முயற்சிக்காதீர்கள்; இது உங்கள் நேரத்தை வீணடித்து, பன்றியையும் எரிச்சலூட்டும்.
# ஒரு தாயாக இருப்பது ஒரு அணுகுமுறை, ஒரு உயிரியல் உறவு அல்ல.
# பட்டாம்பூச்சிகள் என்பவை சுயமாக இயக்கப்படும் பூக்கள்.
# ஆபத்தான ஆயுதங்கள் என்று எதுவுமில்லை; ஆபத்தான மனிதர்கள் மட்டுமே உள்ளனர்.
# கற்றலின் வழியிலேயே நம்பிக்கை பெறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in