Published : 23 Sep 2019 09:36 AM
Last Updated : 23 Sep 2019 09:36 AM

புதுப்பொலிவுடன் களமிறங்கும் டிவிஎஸ் வாகனங்கள்

கடந்த சில வாரங்களில் மட்டும் டிவிஎஸ் நிறுவனம் தனது பைக், ஸ்கூட்டர் மாடல்களின் ஸ்பெஷன்
எடிஷன்களை அறிமுகப்படுத்தியுள்ளன. ஸ்கூட்டரில் ஆக்டிவாவுக்குப் போட்டியாக இருக்கும் டிவிஎஸ் ஜூபிடர், டிவிஎஸ் என்டார்க் மற்றும் பைக் மாடல்களில் டிவிஎஸ் ரேடியான், ஸ்டார் சிட்டி பிளஸ் ஆகியவை மேம்படுத்தப்பட்ட சிறப்பு தயாரிப்புகளாகச் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

என்டார்க் 125 ரேஸ் எடிஷன்

இந்த ஸ்கூட்டர் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் டிசைன் ஸ்போர்ட்டியாக இருப்பதால் இளைஞர்களுக்குப் பிடித்த ஸ்கூட்டராக இருந்துவருகிறது. தற்போது இதில் ரேஸ் எடிஷன் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது இளைஞர்களை மேலும் குதூகலப்படுத்தும். இந்த ரேஸ் எடிஷனில்
சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இளம் தலைமுறை இளைஞர்களை கவரும் நோக்கத்திலேயே இது வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. ‘ரேஸ் எடிஷன்’ என்ற சின்னமும் இதில் குறிப்பிடப்பட்டிருக்கும். 125 சிசி திறன் கொண்டிருக்கும் இதன் இன்ஜின் 6.9 கிலோ வாட் பவரை 7500 ஆர்பிஎம்-ல் உற்பத்தி செய்யக் கூடியது. குறிப்பாக இன்ஜின் பிஎஸ் 6 தரத்தில் வருகிறது. ஹோண்டா ஆக்டிவா 125 எஃப் 1 மாடலுக்குப் பிறகு இரண்டாவது பிஎஸ் 6 தர ஸ்கூட்டர் இதுவாகும். இதில் புதிய டி வடிவ எல்இடி டிஆர்எல் முகப்பு விளக்குப் பொருத்தப்பட்டிருக்கிறது. மேட் பிளாக், மெட்டாலிக் பிளாக், மெட்டாலிக் ரெட் ஆகிய மூன்று வண்ணங்களில் இது வெளிவருகிறது. இதன் விலை ரூ.62,995 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



டிவிஎஸ் ரேடியான்

ரேடியான் பைக் ஸ்பெஷல் எடிஷனாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டிஸ்க் பிரேக், டிரம் பிரேக் என இரண்டு வேரியன்ட்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரேடியானில் டிஸ்க் பிரேக் ஆப்ஷன் முதன்முறையாக வழங்கப்படுகிறது. டிரம் பிரேக் வேரியன்ட் ரூ.52,720 என்ற விலையிலும், டிஸ்க் பிரேக் வேரியன்ட் ரூ.54,820 என்ற விலையிலும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ஸ்பெஷல் எடிஷன் என்பதால், லிவர், மிரர், கார்புரேட்டர் கவர் ஆகியவற்றில் குரோம் ஃபினிஷும், புதிய பெயின்ட்டிங் பேட்டர்னும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது குரோம் பிளாக், குரோம் பிரவுன் ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது.

ஸ்டார் சிட்டி பிளஸ்

ஸ்பெஷல் எடிஷன் ஸ்டார்ட் சிட்டி பிளஸ்ஸில் புதிய பிளாக் அண்ட் ஒயிட் வண்ணக் கலவைப் பயன்
படுத்தப்பட்டிருக்கிறது. மேலும் சிவப்பு நிற ஹெட்லைட் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர தற்போது சந்தை
யில் உள்ள மாடலுக்கும் இதற்கும் வேறு மாற்றங்கள் எதுவும் இல்லை. விலை உட்பட. இதன் விலை ரூ.54,579
ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விழாக்கால விற்பனையை முன்னிட்டு இந்த ஸ்பெஷல் எடிஷன் களமிறக்கப்பட்டுள்ளது.

டிவிஎஸ் ஜுபிடர் கிராண்ட்

அதிகத்தின் பயன் என விளம்பரப்படுத்துவது போலவே அப்கிரேடட் வெர்ஷனாக மீண்டும் வந்துள்ள
டிவிஎஸ் ஜூபிடர் கிராண்ட்டில் புளூடூத் கனெக்டிவிட்டி உடன் டிஜிட்டல் மற்றும் அனலாக் கலவையில் இன்ஸ்
ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் புதிய கலர் ஆப்ஷன்களுடன் வந்திருக்கிறது. புதிய ஜூபிடர் கிராண்ட் டிஸ்க் பிரேக் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கும்.

எம்போஸ் செய்யப்பட்ட லோகோவிலும் டியூயல் கலர் வழங்கப்பட்டிருக்கிறது. இன்ஜின் மற்றும் செயல்திறனில் முந்தய மாடலிலிருந்து எந்த மாற்றமும் இல்லை. இதன் விலை ரூ.62,346. கிளாசிக் ஜூபிடரை விட ரூ.2,446-ம், ஸ்டேண்டர்ட் ஜூபிடரை விட ரூ.8,855-ம் அதிகம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x