

1596-ம் ஆண்டு முதல் 1650-ம் ஆண்டு வரை வாழ்ந்த ரெனே டெஸ்கார்ட்ஸ் பிரெஞ்சு தத்துவஞானி, கணிதவியலாளர், எழுத்தாளர் மற்றும் விஞ்ஞானி ஆவார். இவர் கணிதம், இயற்பியல், மெய்யியல், மருத்துவம், அரசியல் போன்ற துறைகளில் ஈடுபாடு கொண்டவர். அறிவியல் புரட்சியின் முக்கிய நபராகவும் மற்றும் பகுப்பாய்வு வடிவவியலின் தந்தை என்றும் புகழப்படுபவர்.
இவரது பல தத்துவங்கள் இன்றைய காலகட்டத்துக்கும் பொருந்துமாறு உள்ளது இவரது தனிச்சிறப்பு. இவரின் கண்டுபிடிப்புகள் பொறியியல், கணிதம், இயற்பியல் எனப் பல துறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. டச்சு பொற்காலத்தின் மிகவும் குறிப்பிடத்தக்க அறிவார்ந்த நபர்களில் ஒருவராகவும், நவீன தத்துவத்தில் நிறுவனர்களில் ஒருவராகவும் பரவலாகக் கருதப்படுகிறார்.
# நல்ல அறிவைப் பெற்றிருப்பது மட்டும் போதாது; முக்கியமாக அதை நன்றாகப் பயன்படுத்தவும் வேண்டும்.
# பிறர் என்னை புண்படுத்தும் போதெல்லாம், குற்றத்தை அடைய முடியாத அளவுக்கு என் ஆத்மாவை உயர்த்த முயற்சிக்கிறேன்.
# ஒவ்வொரு சிரமத்தையும் சாத்தியமான மற்றும் அதை தீர்க்க தேவையான பல பகுதிகளாக பிரித்துக்கொள்ளுங்கள்.
# சரியான எண்ணங்கள் சரியான மனிதர்களைப் போலவே மிகவும் அரிதானவை.
# நம்முடைய சொந்த எண்ணங்களைத் தவிர, நமது சக்தியில் வேறு எதுவுமில்லை.
# அனைத்து நல்ல புத்தகங்களையும் வாசிப்பது என்பது கடந்த நூற்றாண்டுகளின் மிகச்சிறந்த மனங்களுடனான உரையாடல் போன்றது.
# ஒரு விஷயத்தில் எந்த சந்தேகமும் இல்லை என்பதை அறியும் வரை அதை உண்மை என ஏற்றுக்கொள்ளக்கூடாது.
# நான் தீர்த்த ஒவ்வொரு சிக்கலும் ஒரு விதியாக மாறியது, பிறகு இது மற்ற சிக்கல்களைத் தீர்க்க உதவியது.
# இந்த உலகத்தை வெல்வதை விட, உங்களை முதலில் வெல்லுங்கள்.
# சந்தேகமே ஞானத்தின் பிறப்பிடம்.
# மக்கள் உண்மையில் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிய, அவர்கள் சொல்வதை விட, அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதில் கவனம் செலுத்துங்கள்.
# உண்மையை விட அதிகம் பழமையானது வேறு எதுவுமில்லை.
# மனிதனின் மனமும் ஆத்மாவும் அவனது உடலிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை.