இந்தியச் சாலையில் மீண்டும் இத்தாலி சொகுசு கார் `மாஸெரடி’

இந்தியச் சாலையில் மீண்டும் இத்தாலி சொகுசு கார் `மாஸெரடி’
Updated on
1 min read

சொகுசுக் கார்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள இத்தாலியைச் சேர்ந்த மாஸெரெடி நிறுவனம் தனது கார்களை இந்தியச் சந்தை யில் அறிமுகப்படுத்த உள்ளது. கோடீஸ்வரர்களை குறிவைத்து மீண்டும் களமிறங்கும் இத்தாலிய நிறுவனத் தயாரிப்புகளின் ஆரம்பவிலை ரூ. 1.4 கோடி. இதற்காக பெருநகரங்களில் 3 விற்பனையகங்களையும் இந்நிறு வனம் திறந்துள்ளது.

இந்நிறுவனம் சர்வதேச அளவில் எஸ்யுவி ரக கார்களை அடுத்த ஆண்டு அறிமுகப் படுத்த உள்ளது. 2011-ம் ஆண்டு மாஸெரெடி கார்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டன.

அப்போது விற்பனையாளர் களுடனான பிரச்சினை காரணமாக இந்தியாவில் விற்பனையை இந்நிறுவனம் நிறுத்தியது.

இந்தியச் சந்தையில் சொகுசு கார்களுக்கு இருக்கும் வரவேற் பைத் தொடர்ந்து மீண்டும் இந்தி யாவில் கார் விற்பனையில் இறங்கியுள்ளதாக நிறுவனத்தின் இந்தியப் பிரிவு தலைவர் போஜன் ஜன்குலோவ்ஸ்கி தெரிவித் துள்ளார். இந்தியாவில் குவாட்ரோ போர்ட், ஜிபிலி, கிரான் டுரிஸ்மோ மற்றும் கிரான்கார்பியோ உள்ளிட்ட 4 மாடல் கார்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இவற்றின் விலை ரூ. 1.14 கோடி முதல் ரூ. 2.2 கோடியாகும்.

மாஸெரெடி நிறுவனம் ஃபியட் குழுமத்தின் அங்கமாக 2005-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்தது. இப்போது இக்குழுவிலிருந்து வெளியேறி தனி நிறுவனமாக செயல்படுகிறது.

தலைநகர் டெல்லி, நிதி தலைநக ராகக் கருதப்படும் மும்பை, தகவல் தொழில்நுட்ப நகரான பெங்களூர் ஆகிய மூன்று நகரங்களிலும் விற்பனையகங்களைத் தொடங்க திட்டமிட்டுள்ளது. இந்த மூன்று இடங்களிலும் விற்பனைக்குப் பிந்தைய சேவை மையங்களையும் தொடங்க உள்ளது.

அடுத்தகட்டமாக கொல்கத்தா, ஹைதராபாத், அகமதாபாத், சென்னை ஆகிய நகரங்களில் விற்பனையாளர்களை நியமிக்க முடிவு செய்துள்ளது. கடந்த முறை இந்தியாவில் விற்பனையைத் தொடங்கியபோது 10 கார்களை விற்பனை செய்தது இந்நிறுவனம்.

இந்த கார்கள் அனைத்தும் இத்தாலியில் தயாரிக்கப்பட்டு கப்பல் மூலமாக இந்தியாவுக்குக் கொண்டு வந்து விற்பனை செய்ய இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

கடந்த ஆண்டு இந்நிறுவனம் உலகம் முழுவதும் 36,500 கார் களை விற்பனை செய்துள்ளது. இந்த ஆண்டு 75 ஆயிரம் கார்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்து இந்தியாவில் மீண்டும் விற்பனையைத் தொடங்கி யுள்ளது.

இந்தியாவில் கோடீஸ்வரர்கள் அதிகரித்து வரும் நிலையில் இத்தகைய கார்களுக்கு கிராக்கி இருந்து கொண்டுதானிருக்கும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in