

1689-ம் ஆண்டு முதல் 1755-ம் ஆண்டு வரை வாழ்ந்த மான்டெஸ்கியூ பிரெஞ்சு தத்துவவாதி, எழுத்தாளர், நீதிபதி, அரசியல் மற்றும் சமூக வர்ணனையாளர். உலகம் முழுவதும் பல அரசியலமைப்புகளில் செயல்படுத்தப்படுகின்ற அதிகாரங்களைப் பிரிக்கும் கோட்பாட்டுக்காக பெரிதும் அறியப்படுபவர்.
இவரது அரசியல் மற்றும் சமூக சிந்தனைகள் உலகம் முழுவதும் பரவலான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இவரது “தி ஸ்பிரிட் ஆஃப் லாஸ்” என்ற படைப்பு அரசியல் கோட்பாட்டுக்கான சிறந்த பங்களிப்பாக அமைந்தது. மிகவும் செல்வாக்கு மிக்க அரசியல் மற்றும் சமூக சிந்தனையாளர்களுள் குறிப்பிடத்தக்கவராக இன்றளவும் கருதப்படுகிறார்.
# ஒரு அரசாங்கத்தின் சீரழிவு எப்போதுமே அதன் கொள்கைகளின் சிதைவால் தொடங்குகிறது.
# சட்டம் எதை அனுமதிக்கிறதோ அதைச் செய்வதற்கான உரிமையே சுதந்திரம்.
# உலகில் வெற்றிபெற ஒருவர் முட்டாளாகத் தோன்ற வேண்டும். ஆனால், புத்திசாலித்தனமாக இருப்பது அவசியம் என்பதை நான் எப்போதும் கவனித்திருக்கிறேன்.
# நாம் மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால், அது எளிதானது; ஆனால் மற்றவர்களை விட நாம் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறோம். அது எப்போதும் கடினம்.
# பயனற்ற சட்டங்கள் தேவையான சட்டங்களைப் பலவீனப்படுத்துகின்றன.
# போரினால் நிறுவப்பட்ட ஒரு பேரரசு, போரினாலேயே தன்னைத் தக்கவைத்துக்கொள்ளும்.
# மனிதர்களுக்கு இடையே ஒரு பிணைப்பை உருவாக்கக்கூடிய ஒரே ஒரு விஷயம், நன்றியுணர்வு.
# அரசாங்கத்தின் மூன்று இனங்கள்: குடியரசு, முடியாட்சி மற்றும் சர்வாதிகாரம்.
# ஆடம்பரம் குடியரசுகளை அழிக்கிறது; வறுமை முடியாட்சிகளை அழிக்கிறது.
# உண்மையிலேயே சிறந்தவராக வேண்டுமெனில், ஒருவர் மக்களுடன் மக்களாக நிற்க வேண்டும், அவர்களுக்கு மேலே அல்ல.
# பெரும்பாலும் வெற்றியானது, வெற்றிபெற எவ்வளவு காலம் ஆகும் என்று அறிவதைப் பொறுத்தது.
# சட்டங்களின் தீவிரம் அவை நிறைவேற்றப்படுவதைத் தடுக்கிறது.
# ஒரு மணிநேர வாசிப்பு நிவாரணம் அளிக்காத எந்த மன உளைச்சலையும் நான் ஒருபோதும் அறிந்ததில்லை.