

பண்டிகைக் காலம் நெருங்கி வருகிற நிலையில் டாடா நிறுவனம் அதன் எஸ்யுவி மாடலான ஹாரியரை டார்க் எடிஷனாக அடர் கருப்பு வண்ணத்தில் மீண்டும் புதுப்பொலிவுடன் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஆண்டின் ஜனவரி மாதம்தான் ஹாரியர் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது முழு கருப்பு வண்ணத்தில் சிறப்பு மாடலாக மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன் வெளிப்புறம், உடப்புற இருக்கைகள், டேஷ் போர்ட் என அனைத்தும் கருப்பு வண்ணமாக காட்சி தருகின்றன.
மிகவும் உயர்தரத்திலான, கணக்கச்சிதமான வடிவமைப்பை அவை கொண்டிருக்கின்றன. 1956 சிசி திறனைக் கொண்டிருக்கும் இதன் இன்ஜின் 138 ஹெச்பி பவரை 3,750 ஆர்பிஎம்-ல் உற்பத்தி செய்யும். ஆறு ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸை கொண்டிருக்கும் டாடா ஹாரியர், டீசல் இன்ஜினில் மட்டும் வெளிவருகிறது. லிட்டருக்கு 17 கிலோ மீட்டர் மைலேஜ் கொடுக்கும் என்று கூறப்படுகிறது.
பார்க்கிங் சென்சார், ரிவர்ஸ் கேமரா உட்பட பல நவீன தொழில்நுட்ப வசதிகளையும் இது கொண்டிருக்கிறது. இதன் விலை ரூ.16.76 லட்சம் முதல் ஆரம்பம் ஆகிறது. கருப்பு வண்ணத்தில் சிலருக்கு அதீத மோகம் உண்டு. அத்தகைய பிரியர்களை இலக்காக வைத்து டாடா ஹாரியர் டார்க் எடிஷன் களம் இறக்கப்பட்டுள்ளது.