

1985-ம் ஆண்டு பிறந்த மைக்கேல் பெல்ப்ஸ் அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற நீச்சல் வீரர் ஆவார். தனது ஏழாவது வயதில் நீந்தத் தொடங்கி, பல்வேறு நீச்சல் போட்டிகளில் பல உலக சாதனைகளைப் படைத்தவர். ஒலிம்பிக் வரலாற்றில் அதிக தங்கப் பதக்கங்கள் மற்றும் அதிகப் பதக்கங்களைப் பெற்ற வீரர் என்ற சாதனைக்குச் சொந்தக்காரர். மேலும், இருபத்தாறு கின்னஸ் உலக சாதனைகளையும் படைத்துள்ளார். நீச்சல் விளையாட்டு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை மேம்படுத்தும் நோக்கில் அறக்கட்டளை ஒன்றை நிறுவியுள்ளார். அனைத்து காலத்துக்குமான மிகச்சிறந்த நீச்சல் வீரராகக் கருதப்படுகிறார்.
#எனது சொந்த செயல்திறனை மட்டுமே என்னால் கட்டுப்படுத்த முடியும்.
#நான் சிறந்த செயலைச் செய்தால், நாள் முடிவில் என்னால் நல்லதை உணர முடியும்.
#இலக்குகள் ஒருபோதும் எளிதானதாக இருக்கக்கூடாது என்று நான் நினைக்கிறேன்.
#உங்களால், எதற்கும் ஒரு வரம்பை நிர்ணயம் செய்ய முடியாது.
#நீங்கள் சிறந்தவராக இருக்க விரும்பினால், மற்றவர்கள் செய்ய விரும்பாத விஷயங்களை நீங்கள் செய்ய வேண்டும்.
#நீங்கள் உங்களது மனம், செயல் மற்றும் நேரம் ஆகியவற்றை அதில் வைத்திருக்கும் வரை அனைத்தும் சாத்தியம்.
#உங்கள் மனமே உண்மையில் எல்லாவற்றையும் கட்டுப்படுத்துகிறது என்று நான் நினைக்கிறேன்.
#வரலாற்று ரீதியிலான எதையும் நான் கணிக்க மாட்டேன். எதுவும் சாத்தியமற்றது இல்லை.
#எனது தனிப்பட்ட வாழ்க்கையை நீச்சலில் இருந்து பிரிக்க முயற்சிக்கிறேன்.
#நான் பயிற்சி பெறாத கடைசி நாள் எனக்கு நினைவில் இல்லை.
#எனது அதிகபட்சத்தை நான் சோதித்துப் பார்க்க விரும்புகிறேன், என்னால் எவ்வளவு முடியும் என்பதைப் பார்க்கிறேன்.
#விளையாட்டில் புதிய முகங்களைப் பெறுவதே நான் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் மிகப்பெரிய விஷயங்கள் என்று நினைக்கிறேன்.
#நான் எங்கு செல்ல விரும்புகிறேனோ அதை அடைந்துவிட்டேன் என்று நினைக்கும் வரை நான் விட்டுக்கொடுக்கப் போவதில்லை.
#நீங்கள் எவ்வளவு கனவு காண்கிறீர்களோ அவ்வளவு சாதிக்கிறீர்கள்.