வெற்றி மொழி: மிஷல் -டி- மோன்தைனியா

வெற்றி மொழி: மிஷல் -டி- மோன்தைனியா
Updated on
1 min read

1533-ம் ஆண்டு முதல் 1592-ம் ஆண்டு வரை வாழ்ந்த மிஷல்-டி-மோன்தைனியா பிரெஞ்சு எழுத்தாளர், மறுமலர்ச்சி சிந்தனையாளர் மற்றும் தத்துவஞானி ஆவார். கட்டுரையை ஒரு இலக்கிய வகையாக பிரபலப்படுத்தியமைக்காக பெரிதும் அறியப்படுபவர். மேலும், பிரெஞ்சு மறுமலர்ச்சியின் மிக முக்கியமான தத்துவவாதிகளில் ஒருவராக கருதப்படுகிறார். சிறுவயதிலேயே அரசியல் நடவடிக்கைகளில் அதிக ஆர்வமுடையவராக விளங்கினார். தனது வாழ்நாளில் ஒரு எழுத்தாளரைக் காட்டிலும் ஒரு அரசியல்வாதியாகவே அதிகப் புகழினைப் பெற்றார். இவரது படைப்புகள் புகழ்பெற்ற பல மேற்கத்திய எழுத்தாளர்களிடம் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தின.

* வாழ்க்கையின் மதிப்பு என்பது நாட்களின் நீளத்தில் இல்லை, அவற்றை நாம் பயன்படுத்தும் விதத்தில் உள்ளது.
* ஒருவரின் கருத்தோடு பிடிவாதமாகவும் தீவிரமாகவும் ஒட்டிக்கொள்வது முட்டாள்தனத்துக்கான சிறந்த சான்று.
உண்மையான கல்வியில், நமக்கு கிடைக்கும் எதுவும் ஒரு புத்தகத்தைப் போல சிறந்ததே.
* பார்வையற்ற மனைவி மற்றும் காது கேளாத கணவருக்கு இடையிலான திருமணமே ஒரு நல்ல திருமணமாக இருக்கும்.
* வேறு எந்த பாடத்தையும் விட அதிகமாக நான் என்னையே படிக்கிறேன். அதுவே எனது மனோதத்துவவியல்.
* எல்லோரும் ஒப்புக்கொள்ளும் ஒரு உரையாடலை விட அதிக சலிப்பான உரையாடல் வேறு எதுவும் இல்லை.
* நல்லது செய்வதில் ஒருவித மனநிறைவு இருக்கிறது, அது நம்மை நாமே சந்தோஷப்படுத்திக்கொள்ளச் செய்கிறது.
* சத்தம் மற்றும் கட்டளையின் மூலமாக தனது வாதத்தை வைப்பவர், தனது காரணம் பலவீனமாக இருப்பதையே காட்டுகிறார்.
* உண்மையான தைரியமே அனைத்து நல்லொழுக்கங்களிலும் விநோதமான, தாராளமான மற்றும் பெருமையானதாகும்.
* துன்பத்துக்கு அஞ்சும் ஒரு மனிதன் ஏற்கெனவே தான் அஞ்சுவதால் துன்பப்படுபவன்.
* ஒரு மனிதன் தன் தலையை வைத்து ஓய்
வெடுக்கக்கூடிய மென்மை
யான தலையணையே அறியாமை.
* முகத்தில் உள்ளதை விட மனதில் அதிக சுருக்கங்களைப் பதிக்கிறது வயது.
* மற்றொருவரின் நற்குணம் குறித்த நம்பிக்கை ஒருவரின் சொந்த நற்குணத்திற்கு நல்ல சான்று.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in