எம்ஜி மோட்டார்ஸின் ‘எக்ஸ்டெண்டர்’

எம்ஜி மோட்டார்ஸின் ‘எக்ஸ்டெண்டர்’
Updated on
1 min read

எம்ஜி மோட்டார்ஸ் எக்ஸ்டெண்டர் என்ற பிக்அப் டிரக் குறித்த தகவல்களை வெளியிட்டிருக்கிறது. மேக்சஸ் டி70 என்ற டிரக்கைத்தான் எம்ஜி மோட்டார்ஸ் ரீபேட்ஜிங் செய்து எக்ஸ்டெண்டராக உருவாக்கியிருக்கிறது. தற்போது இந்த எக்ஸ்டெண்டர் தாய்லாந்தில் மட்டுமே விற்பனையில் இருந்துவருகிறது.

இந்தியாவில் இருக்கும் பிக் அப் டிரக் போன்ற சாதாரண வடிவமைப்புடன் இல்லாமல் ஸ்போர்ட்டியான டிசைனில் இருப்பது எக்ஸ்டெண்டரின் தனித்துவத்தில் முக்கியமானது. மேக்சஸ் டி70 டிரக்கை ரீபேட்ஜ் செய்யும்போது சில மாற்றங்களை எம்ஜி மோட்டார்ஸ் செய்திருக்கிறது. முக்கியமான மாற்றம் கிரில் டிசைன். இன்டீரியரிலும் காரில் இருப்பதுபோன்ற வசதிகள் உள்ளன.

10.0 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி இருக்கைகள், டேஷ்போர்ட் மற்றும் பக்கவாட்டு கதவுகளில் ஆங்காங்கே லெதர் டச் வழங்கப்பட்டுள்ளது. இதில் 2.0 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 163 ஹெச்பி பவரையும், 375 என் எம் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்துகிறது. இதில் 6 ஸ்பீடு மேனுவல், ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களும் தரப்பட்டுள்ளன.

இந்தியாவில் எக்ஸ்டெண்டரை அறிமுகப்படுத்துவதற்கான அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்திடமிருந்து வரவில்லை. ஏற்கெனவே எம்ஜி மோட்டார்ஸ் ஹெக்டர் மாடலை அறிமுகப்படுத்தி இந்திய எஸ்யுவி சந்தையில் பெரும் புயலை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் டிரக் சந்தையிலும் எம்ஜி மோட்டார்ஸ் நுழையுமா என்ற எதிர்பார்ப்பு கிளம்பியிருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in