நிஸான் கிக்ஸ் டீசல் வேரியன்ட் அறிமுகம்

நிஸான் கிக்ஸ் டீசல் வேரியன்ட் அறிமுகம்
Updated on
1 min read

நிஸான் கிக்ஸ் பெட்ரோல் வேரியன்ட்டில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது டீசல் வேரியன்டை அறிமுகப்படுத்தியுள்ளது. கிக்ஸ் எக்ஸ்இ என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த மாடல்,முந்தைய பெட்ரோல் மாடலான கிக்ஸ் எக்ஸ்எல் உடன் ஒப்பிடுகையில் விலைசுமார் ரூ.1.2 லட்சம் குறைவு. ஆனால், கிட்டத்தட்ட கிக்ஸ் எக்ஸ்எல்-ல் உள்ள அனைத்து வசதிகளும் இதிலும் உள்ளன. இதன் வெளிப்புறத் தோற்றம் காண்போரை ஈர்க்கக்கூடிய வகையிலும், உள்புறம்சவுகரியமான பயண அனுபவத்தை வழங்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் நீளம் 4,384 மில்லி மீட்டர்; அகலம் 1,813 மிமீ; உயரம் 1,651 மிமீ என அளவுகள் வடிவைக்கப்பட்டுள்ளன. இந்த கிக்ஸ் எக்ஸ்இ, ஐந்து பேர் அமரக்கூடிய இருக்கை வசதியை கொண்டிருக்கிறது. இதன் டீசல் டேங்க் 50 லிட்டர் கொள்ளளவைக் கொண்டிருக்கிறது. குறைந்த விலையில் அதிகபட்ச வசதியை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களை குறிக்கோளாகக் கொண்டு இந்தக் கார் உருவாக்கப்பட்டு இருப்பதால், கார் இருக்கும் இடத்தை கண்டறிதல், கார் இருக்கும் இடத்தை பகிர்தல், வேக எச்சரிக்கை போன்ற நவீன தொழில்நுட்பங்களும் இதில் வழங்கப்பட்டுள்ளன. இதன் ஏசி அமைப்பு தானாகவே இயங்கக் கூடியது.

பாதுகாப்புக்கு இரண்டு காற்றுப் பைகள் இதில் கொடுக்கப்பட்டுள்ளன. ரியர் பார்க்கிங் சென்ஸார், யுஎஸ்பி, புளூடூத் போன்ற வசகளிலும் இதில் உள்ளன. இதுபோலான 50-க்கும் மேற்பட்ட அம்சங்கள் இதில் உள்ளன. இதனாலயே எஸ்யுவியை விரும்பும் வாகன ரசிகர்கள் இடையே கிக்ஸ் எக்ஸ்இ நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் விலை ரூ.9.89 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒப்பீட்டளவில் இது இதன் முந்தைய மாடல்களின் விலையை விடக் குறைவு. அதே சமயம், அவற்றில் உள்ள பல்வேறு அம்சங்கள்இவற்றிலும் கொண்டுவரப்பட்டு இருக்கின்றன. இது 6 ஸ்பீடு மேனுவல் கியரைக் கொண்டிருக்கிறது. மைலேஜ் பொருத்தவரை லிட்டருக்கு 20.45 கிமீ வரை பயணிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

1,461 சிசி மற்றும் நான்கு சிலிண்டர்களைக் கொண்டிருக்கும் இதன் என்ஜின், 3,850 ஆர்பிஎம்-ல் 109 ஹெச்பி பவரை உற்பத்தி செய்யக் கூடியது. முன்புறம் டிஸ்க், பின்புறத்தில் ட்ரம் பிரேக்கிங் அமைப்புகள் உள்ளன. டீப் புளூ பேர்ல், ஃபயர் ரெட், நைட் ஷேஃட், ப்ளேட் சில்வர், ப்ரான்ஸ் கிரே, பேர்ல் ஒயிட் போன்ற வண்ணங்களில் இந்த கிக்ஸ் எக்ஸ்இ கிடைக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in