

1832-ம் ஆண்டு முதல் 1898-ம் ஆண்டு வரை வாழ்ந்த லூயிஸ் கரோல் இங்கிலாந்தைச் சேர்ந்த புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளர். மேலும், கணிதவியலாளர், கிறித்துவப் பாதிரியார் மற்றும் புகைப்பட கலைஞர் போன்ற பன்முகத் திறனுடையவர். சிறுவயதிலேயே கவிதை, கட்டுரை மற்றும் ஓவியம் ஆகியவற்றில் ஆர்வமுடையவராக விளங்கினார்.
தனது படைப்புகளில் சொற்களின் பயன்பாடு, தர்க்கம் மற்றும் கற்பனை ஆகியவற்றிற்காகப் பெரிதும் அறியப்படுகிறார். குழந்தைகளுக்கான உலகப் புகழ்பெற்ற கற்பனை கதைகளை எழுதியுள்ளார். சிறுவர்களுக்கான இவரது இலக்கிய நூல்கள் இலக்கியவாதிகளிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
# முந்நூற்று அறுபத்து நான்கு நாட்கள் பிறந்தநாள் இல்லாத பரிசுகளை நீங்கள் பெறும்போது, பிறந்தநாள் பரிசுகளுக்கென்று ஒரே ஒரு நாள் மட்டுமே உள்ளது.
# நேற்றைய தினத்துக்கு என்னால் திரும்பிச்செல்ல முடியாது, ஏனென்றால் நான் அப்போது வேறு நபராக இருந்தேன்.
# வாழ்க்கையின் ரகசியங்களில் ஒன்று என்னவென்றால், மற்றவர்களுக்காக செய்கின்ற அனைத்து செயல்களும் உண்மையில் மதிப்பு வாய்ந்ததே.
# இந்த உலகில் நான் யார்? ஆ! அது பெரிய புதிர்.
# மனம் ஒரு மோசமான நினைவகம், பின்னோக்கி மட்டுமே இயங்குகிறது.
# உங்களால் கண்டுபிடிக்க முடிந்தால் மட்டும், எல்லாவற்றுக்கும் ஒரு தார்மீகம் இருக்கிறது.
# உணர்வுகளை கவனித்துக் கொள்ளுங்கள், ஒலிகள் தங்களைத் தாங்களே கவனித்துக்கொள்ளும்.
# யதார்த்தத்துக்கு எதிரான போரில் கற்பனை மட்டுமே ஒரே ஆயுதம்.
# அனைத்தும் வேடிக்கையானதே; உங்களால் சிரிக்க முடிந்தால்.
# பெரும்பாலான மக்கள் தெரிந்துகொள்ள விரும்பும் விஷயங்கள், பொதுவாக அவர்களின் தனிப்பட்ட விஷயங்கள் அல்ல.
# நாம் ஒருவருக்கொருவர் என்ன செய்கிறோம் என்பதே முக்கியமானது.
# நீங்கள் எங்கு செல்ல வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாவிட்டால், நீங்கள் எந்த பாதையில் செல்கிறீர்கள் என்பது முக்கியமல்ல.
# மனித மனம் பொதுவாக விவரிப்பதற்கும் வரையறுப்பதற்கும் மேலாக, புகழ்வதற்கும் இகழ்வதற்கும் மிகவும் ஆர்வமாக உள்ளது.