வெற்றி மொழி: லீ ஐயகோக்கா
1924-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை வாழ்ந்த லீ ஐயகோக்கா அமெரிக்காவை சேர்ந்த ஆட்டோமொபைல் துறை நிர்வாகி, எழுத்தாளர் மற்றும் தொழிலதிபர் ஆவார். புகழ்பெற்ற ஃபோர்டு நிறுவனத்தில் பணியாற்றிய இவர், அதன் பல வெற்றிகரமான வடிவமைப்புகளில் பங்கேற்றவர். குறிப்பாக ஃபோர்டு மஸ்டாங் காரின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவர். தனது சுயசரிதை உட்பட பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார். வாகனத்தொழில் துறை ஜாம்பவான் என்றும் அமெரிக்காவின் மிகச்சிறந்த தலைமை நிர்வாக அதிகாரி என்றும் புகழப்படுகிறார்.
# மிகுந்த மன அழுத்தம் அல்லது துன்பமான நேரங்களில், எப்போதும் பிஸியாக இருப்பது நல்லது.
# நீங்கள் இறக்கும்போது, ஐந்து உண்மையான நண்பர்கள் உங்களுக்கு கிடைத்திருந்தால், நீங்கள் ஒரு சிறந்த வாழ்க்கையைப் பெற்றிருந்தீர்கள் என்று எனது தந்தை எப்போதும் கூறுவார்.
# தீர்க்க முடியாத சிக்கல்களைப் போன்று அற்புதமாக மாறுவேடமிட்டுள்ள பெரிய வாய்ப்புகளை நாம் தொடர்ந்து எதிர்கொள்கிறோம்.
# தலைவனின் வேகமே அந்த அணியின் வேகம் என்பதை நான் எப்போதும் கண்டுள்ளேன்.
# மனிதர்கள் தங்களது மனநிலையை மாற்றுவதன் மூலமாக தங்கள் வாழ்க்கையை மாற்ற முடியும் என்பதே எனது தலைமுறையின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு.
# பாசம் மின்னல் போன்றது; அது விழும் வரை, எங்கு தாக்கும் என்பதை உங்களால் சொல்ல முடியாது.
# ஒவ்வொரு வணிகத்துக்கும் ஒவ்வொரு தயாரிப்பு பொருளுக்கும் அபாயங்கள் உள்ளன.
# நேர்மையாக இருப்பதே நான் பயன்படுத்தக்கூடிய சிறந்த நுட்பம் என்பதை கண்டுகொண்டேன்.
# தீர்க்கமான என்பது ஒரு நல்ல நிர்வாகியை உருவாக்கும் ஒரு வார்த்தை.
# துல்லியமான அறிவுக்கு மாற்று எதுவும் இல்லை.
# நான் என்னை விட பிரகாசமானவர்களை பணியில் அமர்த்திக்கொள்கிறேன், பின்னர் அவர்களின் வழியிலிருந்து நான் வெளியேறுகிறேன்.
# பகிரப்பட்ட சிக்கல் என்பது பாதியாகிவிட்ட சிக்கல்.
# கவனம் செலுத்தும் திறன் மற்றும் நேரத்தை நன்றாகப் பயன்படுத்துவதிலேயே அனைத்தும் உள்ளன.
