Published : 15 Jul 2019 08:09 AM
Last Updated : 15 Jul 2019 08:09 AM

கடன் அட்டையை தேர்வு செய்வது எப்படி?

நிதி நிர்வாகத்தில் நீங்கள் ஒழுங்கு முறையைக் கடைப்பிடிப்பவரா? அப்படியெனில் நீங்கள் பயன்படுத்தும் கடன் அட்டையும் நீங்கள் தேர்வு செய்ததாக, உங்கள் நிதி தேவைகளுக்கு ஈடு கொடுக்கும் வகையில் இருப்பது அவசியம். கடன் அட்டைக்கான நிலுவைத் தொகையை உரிய காலத்தில் முழுவதுமாக செலுத்துபவராக இருந்தால் அதனால் கிடைக்கும் பல நன்மைகளையும் நீங்கள் பெறலாம். அப்படியெனில் அதற்குரிய கடன் அட்டைகளைத் தேர்வு செய்ய வேண்டும்.

பல வகையான கடன் அட்டைகளைப் பயன்படுத்துவது ஒருபோதும் சரியானதாக இருக்காது. நிதி நிர்
வாகத்தில் ஒழுங்குமுறையைக் கடைப்பிடிப்பவர்கள் அதிகபட்சம் இரண்டு கடன் அட்டைகளை வைத்துக் கொள்வது சரியானதாக இருக்கும். கடன் அட்டைகளை ஒவ்வொரு முறை பயன்படுத்தும்போதும் ரிவார்ட்ஸ் பாயிண்ட் எனப்படும் வெகுமதி புள்ளிகள் கிடைக்கும். அத்துடன் 40 முதல் 45 நாள்களுக்கு கடனுக்கான வட்டியை செலுத்த வேண்டியதில்லை.

அதனால் கடன் அட்டை மூலம் செலவிடும் ஒவ்வொரு ரூபாயையும் கணக்கிட்டு  செலவிட வேண்டும். சில கடன் அட்டை நிறுவனங்கள் கேஷ்-பேக் ஆபர்களை அளிக்கின்றன. இந்த ஆபர்கள் ஆன்லைன் மூலம் பொருள் வாங்கினாலும், வணிக நிறுவனங்களில் வாங்கினாலும் தருகின்றன. இவை பொதுவாக ரிவார்ட் திட்டங்கள் எனப்படுகின்றன. கடன் அட்டையைத் தேர்வு செய்யும்போது ரிவார்ட் திட்டங்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில் எந்த கிரெடிட் கார்டுகள் எத்தகைய ரிவார்ட் திட்டங்களை வைத்துள்ளன என்பதைப் பார்க்கலாம். சமீபகாலங்களில் கடன் அட்டை தொடர்பாக ஸ்மார்ட்போனுக்கு அதிக அழைப்புகள், குறுந்தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன.

இலவச கடன் அட்டை வழங்கும் தகவலாக இவை இருக்கும். பொதுவாக இலவசமாக அளிக்கப்படும் கடன் அட்டைகளைத் தவிர்த்துவிடுங்கள். ஆண்டுக் கட்டணம் வசூலிக்கும் கடன் அட்டைகளில் சலு
கைகள் அதிகம் இருக்கும். ஆண்டுக் கட்டணம் செலுத்துவதிலிருந்தே ரிவார்ட் புள்ளிகள் ஆரம்பமாகும். தேர்ந்தெடுப்பது எப்படி? முதலில், நீங்கள் எதற்கு அதிகம் செலவிடுகிறீர்கள் என்பதை தீர்மானிப்பது முக்கியம். நீங்கள் அடிக்கடி விமான பயணம் மேற்கொள்பவராக இருந்தால், பயணக் கட்டணம் மற்றும் ஹோட்டலில் தங்கும் கட்டணத்துக்கு கடன் அட்டை உபயோகிப்பதாக இருந்தால் உங்களுக்கு டிராவல் கிரெடிட் கார்டு பயனுள்ளதாக இருக்கும். இத்தகைய கார்டுகளில் நீங்கள் பயணம் செய்யும் தூரத்துக்கேற்ப ரிவார்ட் புள்ளிகள் கிடைக்கும்.

அதை நீங்கள் விமான டிக்கெட் வாங்குவதற்கு பயன்படுத்த முடியும். சில நிறுவனங்கள் கடன் அட்டை உள்ளவர்களுக்கு இலவச விமான டிக்கெட் மற்றும் ஹோட்டலில் இலவசமாகத் தங்குவதற்கான வவுச்சர்களையும் வழங்குகின்றன. ஆக்சிஸ் வங்கியின் `மை விங்ஸ்’, சிட்டி வங்கியின் `பிரீமியர் மைல்ஸ்’, ஹெச்டிஎப்சி வங்கியின் `சுப்பிரியா’ கடன் அட்டைகளில் ஏதாவது ஒன்று உங்களுக்குப் பொருத்தமானதாக இருக்கும். எந்த டிராவல் கிரெடிட் கார்டை பயன்படுத்தினாலும் அவை எந்த அளவுக்கு ரிவார்ட் புள்ளிகள் வழங்குகின்றன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். சிட்டி வங்கி ரூ.100 செலவிடுவதற்கு 10 மைல் தூரத்துக்கு விமான கட்டணத்தில் சலுகை அளிக்கிறது.

இவை அதற்கான பிரத்யேக இணைய தளத்தை பயன்படுத்துவதன் மூலம் பெறலாம்.
இத்தகைய டிராவல் கிரெடிட் கார்டுகள் சில பொருட்கள் வாங்குவதற்கு கூடுதலாக ரிவார்ட் புள்ளிகளை அளிக்கின்றன. இதற்கென ரிவார்ட் புரோகிராம் இணையதளங்கள் உள்ளன. இவற்றில் சிலவற்றை சினிமா டிக்கெட், ஹோட்டலில் உணவு சாப்பிட பயன்படுத்திக் கொள்ள முடியும். டிராவல் கார்டு தவிர மேலும் ஒரு கடன் அட்டை இருந்தால் வசதி என நீங்கள் கருதும்பட்சத்தில் உங்கள் செலவிடும் போக்கை கணக்கில் எடுத்துக்கொள்ளுங்கள்.

ஹோட்டலில் சாப்பிடுவது, சினிமா தியேட்டர் செல்வது, ஷாப்பிங் போன்றவற்றுக்கும்,  வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்
பவும் கடன் அட்டைகளை பயன்படுத்துவதாக இருந்தால் அது சார்ந்த கடன் அட்டைகளை பெறலாம். பெரும்
பாலான கடன் அட்டை நிறுவனங்கள் பெட்ரோலுக்கு விதிக்கப்படும் சர்சார்ஜ் கட்டணங்களை ஏற்றுக் கொள்கின்றன. அந்த சலுகைகளை பெட்ரோல் நிரப்பும்போது பெறலாம். கிரெடிட் கார்டுக்கு ஏற்ற வகையில் உங்கள் வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்வதாக இருந்தால் அதற்குப் பல வழிகள் உள்ளன.

ஒரு குறிப்பிட்ட நிறுவனம் சார்ந்த கடன் அட்டையாக இருப்பின் அது பல சமயங்களில் தவறாகிவிடும். இது உங்கள்
செலவிடும் அளவை கட்டுப்படுத்தி விடும். அதேசமயம் அதிக ரிவார்ட் புள்ளிகள் கிடைக்கும். இதை நீங்கள் ஹோட்
டலிலோ அல்லது பிற வர்த்தக நிறுவனங்களில் பொருள் வாங்கும் போதோ பயன்படுத்திக்கொள்ளலாம். உங்கள் செலவு செய்யும் போக்கை ஆராய்ந்து அதற்குரிய கடன் அட்டைகளைத் தேர்வு செய்வது பயனளிக்கும்.

ஆண்டுக் கட்டணம் செலுத்தி பெறும் கடன் அட்டைகளில், இதற்கான கட்டணத்தை விட கூடுதல் பலனை ரிவார்ட் புள்ளிகளாகப் பெற்று பயனடையலாம். ரிவார்ட் புள்ளிகள் அதற்குரிய இணையதளங்களில் சென்று இடம் பெற்றுள்ள பொருட்களையும் பெற முடியும். கிரெடிட் கார்டைப் பொருத்த மட்டில் இரண்டுக்கும் மேலாக வைத்
திருப்பது அறிவுடமையல்ல. கடன் அட்டைகளில் பல சலுகைகள் கிடைக்கிறது என்பதற்காக பர்ஸ் முழுவதும்
கடன் அட்டைகளாக வைத்திருப்பது சரியான நிதி நிர்வாகத்துக்கு வழிவகுக்காது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x