சந்தை மதிப்பு

சந்தை மதிப்பு
Updated on
1 min read

நிறுவனங்கள் அதன் சந்தை மதிப்பை வைத்துதான் அளவிடப்படுகிறது. இந்திய அளவில் சந்தை மதிப்பில் முதல் 10 இடத்தில் உள்ள நிறுவனங்கள் மற்றும் சர்வதேச அளவில் முதல் 10 இடத்தில் இருக்கும் நிறுவனங்கள் குறித்த ஒரு பார்வை.

பிஎஸ்இ

1,05,30,105 கோடி ரூபாய்.

பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள்

5,719

சென்செக்ஸ்

4,752,367.92 கோடி ரூபாய்.

பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள்

30

சர்வதேச அளவில் அதிக சந்தைமதிப்பு கொண்ட 100 நிறுவனங்களில் அமெரிக்காவில் 53 நிறுவனங்கள் உள்ளன. ஆப்பிள், கூகுள், எக்ஸான் ஆகிய நிறுவனங்கள் முதல் மூன்று இடத்தை பிடித்துள்ளன.

சர்வதேச அளவில் முதல் 100 நிறுவனங்களில் நிதிச்சேவை பிரிவில் 19 நிறுவனங்களும், ஹெல்த்கேர் பிரிவில் 18, கன்ஸ்யூமர் குட்ஸ் 18, டெக்னாலஜி பிரிவில் 12 நிறுவனங்களும் உள்ளன.

சந்தை மதிப்பில் சர்வதேச அளவில் முதல் இடத்தில் இருக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் 740 பில்லியன் டாலர். இந்திய அளவில் முதல் இடத்தில் இருக்கும் டிசிஎஸ் நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் 80 பில்லியன் டாலர். கிட்டத்தட்ட 10 மடங்கு வித்தியாசம். இன்னும் சில பில்லியன் டாலர் மதிப்பு உயரும் பட்சத்தில் டாப் 100 பட்டியலில் டிசிஎஸ் நுழைய வாய்ப்பு இருக்கிறது.

இது மார்ச் மாத இறுதியில் சேகரிக்கப்பட்ட தகவல்கள். சமீபத்தில் சீன சந்தைகள் கடுமையாக சரிந்ததால் இந்த பட்டியலில் மாறுபாடு இருக்ககூடும்.

பேஸ்புக், ஜெனரல் எலெக்ட்ரிக் ஆகிய நிறுவனங்கள் முதல் பத்து இடங்களுக்குள் இடம் பிடிக்க வாய்ப்பு உள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in