

1850 ஆம் ஆண்டு முதல் 1894 ஆம் ஆண்டு வரை வாழ்ந்த ராபர்ட் லூயிஸ் ஸ்டீவன்சன், ஸ்காட்லாந்தை சேர்ந்த ஒரு ஆங்கில எழுத்தாளர் ஆவார். பயண இலக்கியம், கவிதைகள், கட்டுரைகள் என பல்வேறு வகைகளில் தனது எழுத்துத் திறமையினை வெளிக்காட்டியவர். கடல் பயணங்களின் மீது அதீத விருப்பம் உடையவர்.
அந்த அனுபவங்களின் அடிப்படையிலேயே இவரது நிறைய நாவல்கள் அமைந்தன. இவரது படைப்புகள் தொலைக்காட்சி தொடர்களாகவும், திரைப்படங்களாகவும் வெளிவந்துள்ளன. இவர் மறைந்து நூறு ஆண்டுகளுக்கு மேலாகியும், இவரது படைப்புகள் இன்றும் இலக்கிய உலகில் அழியாப் புகழுடன் இருக்கின்றன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் மிகச்சிறந்த எழுத்தாளர்களில் ஒருவராக அறியப்படுகிறார்.
$ சமாதானமே சிறந்த மற்றும் மலிவான வழக்கறிஞர்.
$ ஒவ்வொரு மனிதனும் எங்கோ ஓரிடத்தில் விவேகத்தினைக் கொண்டிருக்கிறான்.
$ உங்கள் அச்சத்தை உங்களுடனேயே வைத்துக்கொள்ளுங்கள், ஆனால் உங்கள் தைரியத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
$ ஒவ்வொரு நாளையும் அறுவடைக்கான நாளென்று மதிப்பிடாதீர்கள், ஒவ்வொரு நாளும் விதைப்பதற்கான நாளென்று எண்ணுங்கள்.
$ ஒரு நீண்ட வாழ்க்கைக்கும், ஒரு சிறந்த விருந்திற்கும் இடையேயான ஒரே வித்தியாசம், விருந்தில் இனிப்புகள் இறுதியிலேயே கிடைக்கின்றன.
$ எவனொருவன் அடிக்கடி சிரித்து, அதிகமாக நேசித்து, நல்ல வாழ்க்கையினை வாழ்ந்தானோ, அவனே வெற்றிபெற்ற மனிதனாகிறான்.
$ இந்த உலகத்தில் நாம் அனைவரும் பயணிகள்; நமது பயணத்தில் நாம் கண்டறியக்கூடிய சிறந்த விஷயம் நேர்மையான நண்பர்களே.
$ எந்த மனிதனும் பயனற்றவன் இல்லை, அவனுக்கு ஒரு நண்பன் இருக்கும்போது.
$ ஒரு நல்ல நண்பன், நீங்கள் உங்களுக்கே கொடுத்துக் கொள்ளக்கூடிய பரிசு.
$ மறந்துவிடுவதே என்னுடைய மிகப்பெரிய நினைவுத்திறனாக உள்ளது.
$ கோழைகளுக்கு இந்த உலகில் இடமில்லை.