Published : 06 Jul 2015 12:07 PM
Last Updated : 06 Jul 2015 12:07 PM

புத்தக அலமாரி- 06.07.2015

Title: A Better Way to Sell

Author: Ranjan L G De Silva

Publisher: Pearson Education

ஒரு செயலில் முன்னேற்றம் ஏற்பட வேண்டுமென்றால் அதற்கான உழைப்பு மிகவும் அவசியம். விற்பனையிலும் இதுவே நமக்கு தேவைப்படுகின்றது. விற்பனை மட்டுமல்லாமல், தனிப்பட்ட மற்றும் தொழில்முறையிலான வாழ்க்கைக்கு தேவையான விஷயங்களைப்பற்றிச் சொல்கின்றது இந்த புத்தகம்.

இவைமட்டுமல்லாமல் குடும்பம், பணி, ஆரோக்கியம் மற்றும் பொழுதுபோக்குகள் போன்ற வாழ்க்கைமுறை சார்ந்த அனைத்திற்கும் தேவையான கருத்துகளைப்பற்றி பேசுகின்றது. விற்பனைத்திறனை மேம்படுத்த தேவையான யோசனைகளையும் தீர்வுகளையும் சொல்கின்றது. மேலும், விற்பனைக்கான சந்திப்புகள் மற்றும் நேர மேலாண்மை பற்றியும் சொல்லப்பட்டுள்ளது.

Title: How to Sell Anything to Anybody

Author: Joe Girard

Publisher: Simon & Schuster

விற்பனையில் ஒருவர் தனது இலக்குகளை எட்டுவதற்கான வழிகளைப்பற்றி சொல்கின்றது இந்த புத்தகம். எவ்வாறு விற்பனைக்கு இறுதி வடிவம் கொடுப்பது? என்பதற்கான உத்திகளைக் கற்றுத்தருகிறார் ஆசிரியர். விற்பனையின் தேவை, நமது செயல்களைப்பற்றி நாம் தெளிவாக அறிந்துகொள்ளுதல், வெற்றிக்கான அணுகுமுறையினை அமைத்துக்கொள்ளும் வழிமுறை மற்றும் செயல்பாட்டில் நேர்மை போன்ற விஷயங்களைப்பற்றிய தெளிவான கருத்துகளைக் கொண்டுள்ளது.

மேலும், நமது சொந்த அனுபவத்தின்மூலம் கற்றுக்கொள்ளும் விஷயங்கள், வாடிக்கையாளர்களை எவ்வாறு எதிர்கொள்வது? மற்றும் அவர்களின் நம்பிக்கையினை பெறுவது எப்படி? போன்றவற்றைப்பற்றியும் பேசுகின்றது.



Title: How to Sell Yourself

Author: Arch Lustberg

Publisher: Jaico Publishing House

நமது செய்திகளையும், கருத்துக்களையும் மற்றும் யோசனைகளையும் மற்றவர்களிடம் கொண்டுசேர்ப்பதற்கான வழிகளை வெற்றிகரமான உத்திகளின்மூலம் கற்றுத்தரும் புத்தகம் இது. எந்தவொரு சூழ்நிலையிலும் நமது பேச்சினை மதிப்புமிக்கதாக மாற்றியமைக்கத் தேவையான திறன்களை எளிமையாகவும், தெளிவாகவும் அதேசமயம் எளிதில் புரிந்துக்கொள்ளும் விதமாகவும் சொல்லித்தருகின்றார் ஆசிரியர். நமது மனம், முகம், உடல் மற்றும் நமது குரல் ஆகியவற்றை எவ்வாறு உபயோகப்படுத்தி வெற்றிக்காண்பது என்பதைப்பற்றி சொல்லப்பட்டுள்ளது. நமது நம்பிக்கை, வேலைக்கான நேர்முகம், உரையாடல்கள் மற்றும் தலைமைப்பண்பு போன்றவற்றைப்பற்றியும் பேசுகின்றது.



Title: Soft Sell

Author: Tim Connor

Publisher: Magna Publishing Co. Ltd.

புதிய அணுகுமுறை மற்றும் மென்மையான போக்கின்மூலம் எவ்வாறு விற்பனையினை மேம்படுத்துவது என்பதற்கான புத்தகம் இது. வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்ளுதல், வாடிக்கையாளர்களின் உண்மையான தேவைகளை கண்டறிதல், வாடிக்கையாளர்களின் மீதான விசுவாசம் மற்றும் ஆதரவு போன்றவற்றைப்பற்றி பேசுகின்றது.

வெற்றிகரமான விற்பனையாளருக்கான குணங்கள், விற்பனை சரிவினை மாற்றியமைக்கத் தேவையான வழிமுறைகள் மற்றும் தனிப்பட்ட சாதனைகளுக்கான செயல்பாடுகள் பற்றியும் சொல்லப்பட்டுள்ளது. அணுகுமுறையின் மீதான கட்டுப்பாடு, வாய்ப்புகள், ஆட்சேபனைகளை கையாளுதல், ஆவணப்பராமரிப்பு மற்றும் விற்பனைக்கு பிந்தைய சேவை போன்றவையும் இடம்பெற்றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x